இப்படிக்கு நான்…!

என் கண்கள் காட்டிக் கொடுத்த
உண்மைகளை விட என் காதுகள்
கேட்ட பொய்களே அதிகம்.

*

எனது கல்லை எப்போதும்
இரண்டு விடயங்களை
நோக்கியே வீசுகிறேன்
தவறினால்
ஒன்றாவது விழும்
என்பதால்

*

இந்த உலகத்துக்கு நான்
ஒரு புத்தகமாகவாவது
இல்லாமல் இறந்தாலும்
ஒரு தத்துவத்தையாவது
விட்டுத்தான் இறப்பேன்.

*

நான் எதையும்
சம்பாதிக்கவில்லை
என்னைத் தவிர எனக்கு.

*

நான் எதையும் இழக்கத் தயார்
இழப்பதைவிட பெறுவது பெறுமதி
வாய்ந்ததாக இருக்குமானால்.

*

என்னை விளங்கப்படுத்த
கரும்பலகை தேவையில்லை
ஒரு காரணம் போதும்.

*

நான் வற்றிப் போனபின் தான்
தெரிந்து கொண்டேன் என்னை
எத்தனைபேர் குடி நீராகா
பாவித்தார்கள் என்பதை

*

என்னிடம் இருப்பதே அதிகம்
என்பதை தெரிந்து கொண்டபின் தான்
இறைவனை நான் திட்டுவதில்லை.

*

என் இறந்த காலம் என்ற கண்ணாடியே
நிகழ்காலத்தில் நான் தடுமாறாமல்
நடக்க உதவி செய்கிறது.

*

இறைவனுக்கு தெரிந்த என் எதிர்காலம்
எனக்கு தெரிந்தால் சில வேளைகளில்
என் நிகழ்காலத்தையே நான் வெறுக்ககூடும்.

*

ஆசைபட்டால் கடன்பட்டாவது
அனுபவிப்பேன்.

*

பிரைச்சனைகள் என்னை குளப்பும்
போதுதான் நான் குளம்பாமல்
இருப்பேன்

*

சின்ன வாய்ப்புகளையும்
தவறவிட மாட்டேன்
அனாலும் பெரிய
வாய்புகளுக்காய்
காத்திருக்கிறேன்

*

நான் தெய்வம் இருக்கு என்பதை
நம்புகிறேன் அனால் மததின்
மூடனம்பிக்கையை பின்பற்றுவதில்லை.

*

என் விரல்கள் உள்ளவரை மோதிரங்கள்
தொலைந்ததற்காய் கவலைப்படமாட்டேன்.

*

உனக்கு நான் உதாரணமல்ல
உனக்கு நான் ஒரு தத்துவம்

*

தினமும் தோற்றுப்போகிறேன்
பேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்

*

கடவுள் இருக்கிறார இல்லையா என்று
சந்தேகப்பட்டு வாழ்வதைவிட

கடவுள் இருக்கிறார் என்று
நம்பி வாழ்வதே மிகவும் சிறந்தது.

*

என் வாழ்வில் நான் ஒரு போதும்
விழவே மாட்டேன் என்பதை  நம்பவில்லை

எத்தனை தடவை விழுந்தாலும்
எழுவேன் என்பதைத்தான் நம்புகிறேன்

*

வாழும்வரை
நிழல் தருவேன்

இறந்தால்
என் காதல்
துணைவியே

என்னை
விறகாக்கி
உன் பசி தீர்ப்பேன்

-யாழ்_அகத்தியன்

10 Responses to இப்படிக்கு நான்…!

  1. christopher says:

    hai friend very super……..GOD BLESS YOU…..TAKE CARE

  2. “ஆசைபட்டால் கடன்பட்டாவது
    அனுபவிப்பேன்.”

    வணக்கம் அகத்தியன் கடன்கட்ட வேண்டிவந்தால் ?

    சும்மா ஒரு கேள்வி.

    வாழ்த்துக்கள்.

    - சாந்தி -

  3. uumm says:

    வணக்கம்..அகத்தியன்..
    முதன்முதல்..உங்களை..சந்திக்கிறேன்..அனைத்தும்..மிக..அருமை..கண்டிப்பாக.உங்கள்..தத்துவங்கள்..இவ்வுலகில்..தங்கும்…உங்களைத்தாங்கும்

  4. amallan says:

    hi anna can u send me your email address

  5. வாவூஜி says:

    மேன் மேலும் இவ் உலகில் சிறப்பு பெற எனது வாழ்த்துக்கள்.

  6. // என் வாழ்வில் நான் ஒரு போதும்
    விழவே மாட்டேன் என்பதை நம்பவில்லை

    எத்தனை தடவை விழுந்தாலும்
    எழுவேன் என்பதைத்தான் நம்புகிறேன் //

    எனக்கு உங்கள் நம்பிக்கை ரொம்ப பிடித்திருக்கு அகத்தியன் .. வாழ்த்துக்கள்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.