என் சிந்தனையில்…

உன் எதிரியால் விழுப்புண்

அடைந்து விட்டாயா…

கவலைப்படாதே

எதிரிக்கு தெரிந்த உன்

பலவீனத்தை தெரிந்து

கொண்டதில் சந்தோசப்படு

*

தோல்வியென்னும் படியால்

ஏறித்தான் வெற்றியென்னும்

பரிசை பெறமுடிகிறது

*

வாழும்வரை

போராளியாய் இரு

நீ விபத்தில் இறந்தாலும்

அதுவும் வீரச்சாவுதான்

*

உலகமே தெரியாத குஞ்சு கூட

பாதையே இல்லாத ஓட்டை

உடைத்து வரும்போது

பாதைகள் நிரம்பிய

உலகத்தில் ஏன் கண்ணிருந்தும்

குருடனாய் வாழ்கிறாய்

*

விழுந்தால்

மண்ணோடு மண்ணாக

நீ இன்னும் சாகவில்லை

மறந்துவிடாதே…

இன்னும் நீ உயிர்

உள்ள விதை என்பதை

*

வெற்றியின் பெறுமதி

தோல்வியால்தான்

உணரமுடியும்

*

நம்பிக்கை ஊனமானல்

கால்களால் நடக்க முடியாது

*

திரும்பிப் பார்க்காமல் எவன்

ஓடுகிறானோ அவனே நம்பிக்கையோடு

ஓடுகிறான்

*

வாழ்கை என்பது நிரந்தரமில்லை

எனவே வாழ்வதற்காய் உழைக்காதே

வாழ்ந்துகொண்டே உழை

*

முட்களால் காயப்படமால்

பறித்த எந்த ரோஜாவின்

அருமையை யாரலும்

தெரிந்து கொள்ள முடியாது

*

இயங்கிக் கொண்டே இரு

நீ இறக்கவில்லை

என்பதையாவது

நிருபிக்க

*

காயப்படாமல்

புல்லாங்குழல்

ஆக முடியாது

*

வினாடிகளை விணாக்குபவன்

மணித்தியாலங்களை பற்றி

பேசக் கூடாது

*

அறிவுரைகளால் உன்னை

அடைகாக்க மட்டும்தான் முடியும்

நீதான் உடைத்து வெளிவரவேண்டும்

*

தோல்வியென்னும் புள்ளிகளால்தான்

வெற்றியென்னும் கோலம் போட முடியும்

*

உன் ஆணிவேர் ஆழமாய் இருந்தால்

எந்த சுனாமியாலும் உன்னை

எதுவும் செய்ய முடியாது

*

கண்ணாடிப் பெட்டிக்குள்

வாழ்ந்தாலும் மற்றவர்கள்

உன்னை பார்க்கும்படியாக

கடிகாரமாய் வாழ்

*

இந்த உலகம் உனக்கு

சிறையல்ல நீதான்

கைதியாய் வாழ்கிறாய

*

நீ மண்ணுக்காக போராட

தயங்குகிறாய் ஆனால்

ஒவ்வொரு விதையும்

மண்ணோடு போராடியே

மரமாகிறது

*

வியர்வை சிந்தாத உன்னாலும்

மை சிந்தாத பேனாவாலும்

எதையும் சாதித்திட முடியாது *

தடை தாண்டி

ஓடிக் கொண்டிருப்பவனுக்கு

தடைகள் கண்ணுக்குத் தெரியாது

நீ நினைப்பது போல வாழ்க்கை

ஒன்றும் மரதன் ஓட்டமல்ல

அது தடைதாண்டும் ஒட்டாமே

*

பெருமை

என்பது உன்னைவிட

திறமைசாலிக்கு நீ

கைதட்டுவதில் அல்ல

அவனையும் உனக்காக

கைதட்ட வைப்பதுதான்

*

இந்த உலகம் பூந்தோட்டமல்ல

நீ வளர தண்ணிர் ஊற்ற

இந்த உலகம் பெருங்காடு

நீயாத்தான் வளரவேண்டும்

*

உனக்கு

நண்பன் இருக்கிறானோ

இல்லையோ உனக்கு எதிரி

இருக்க வேண்டும்

ஏனெனில்

உன்னிடம் அணைக்கும் சக்தியைவிட

உன்னிடம் எதிர்க்கும் சக்தியையே

நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்

*

யாரு உன்னை உறிஞ்சி

எறிந்தாலும் முளைத்து வா

பனங்கொட்டையாய்

அதில்தான் உள்ளது

தனித்தன்மை

*

யாருக்காகவும் கண்ணீர்விடு

யாரும் துடைக்க வருவார்கள்

என்பதற்காய் கண்ணீர் விடாதே

*

உன்னில்

வளரும் நகத்தையும்,

முடியையும் வெட்ட

மறப்பதில்லை நீ

ஆனால்..

நீ வளர மறந்தால்

இந்த உலகமே உன்

கழுத்துக்கு கத்தியாகும்

*

வாழ்க்கையில் மிதக்க

கற்றுக் கொள்ளாதே

நீ இறந்தால் தானாகவே

மிதப்பாய்

நீந்தக் கற்றுக்கொள்

அதுவே நீ கரைசேர

உதவி செய்யும்

*

தோல்விகள்

என்பது உன்னை தூங்க

வைக்க பாடும் தாலாட்டு அல்ல

நீ நிமிர்ந்து நிற்பதற்கான

தேசிய கீதம்

*

குட்டக் குட்ட

கல்லாகாதே

குட்டக் குட்ட

சிலையாகு

*

வாழ்க்கை என்பது

ஒரு புத்தகம் அதில்

ஒரு பக்கம் மட்டும்

வாழ்க்கையல்ல

ஒவ்வொரு

பக்கங்களானதே

வாழ்க்கை

-யாழ்_அகத்தியன்

*

*

உன் உருவத்தை உனக்கே

காட்டிக்கொடுப்பது

கண்ணாடி

உன் உள்ளத்தை

மற்றவர்களுக்கு

காட்டிக்கொடுப்பது

உன் பேச்சு

-யாழ்_அகத்தியன்

*

யாரையும் தேவையில்லாம்

விலக்கி வைக்காதே வேணும்

என்றால் ஒதுக்கி வை

உனக்கு தேவை ஏற்படும்போது

அவர்களே தெய்வமாகவே

தெரியக்கூடும்

-யாழ்_அகத்தியன்

*

எல்லாம் தெரியும் எனக்கு

என்று நினைப்ப்தும்

எனக்கு தெரிந்த எதுவும்

யாருக்கும் தெரியாது என்று

நினைப்பதுவுமே மிகப் பெரிய

முட்டாள்தனம்

-யாழ்_அகத்தியன்

*

இந்த உலகம்

என்பது

ஒரு வகுப்பறை

நேற்று யாரோ

இன்று நாம்

நாளை யாரோ

-யாழ்_அகத்தியன்

*

அடுத்தவனின் நிழலில் நின்று

குளிர் காய்வதை விட

தனியாக நின்று கருகிப்

போவதே மேல்

-யாழ்_அகத்தியன்

*

தோல்விகள் மட்டுமே

உன் முயற்சிகளை

சோதிக்கும்

உன் முயற்சிகள்

மட்டுமே வெற்றிகளை

பெற்றுத்தரும்

-யாழ்_அகத்தியன்

*

இழப்புகளின் பெறுமதியில்

எந்த வெற்றியும் தீர்மானிப்பதில்லை

வெற்றிக்கான விருது அதற்கான

இழப்புகளின் பெறுமதியால் தீர்மானிக்க படுகிறது

-யாழ்_அகத்தியன்

*

மனிதனுக்கு ஞாபக சத்தி எவ்வளவு

அவசியமோ அவ்வளவு அவசியம் மறதியும்

-யாழ்_அகத்தியன்

*

வாழ்க்கை எனும் சதுரங்கத்தில்

உன்னோடு விளையாடுகிறது விதி

நீ வெல்ல வேண்டுமானால்

உனக்கான களச்சூழ் நிலையை

நீயே உருவாக்கு

-யாழ்_அகத்தியன்

சந்தர்ப்பம் என்பது தேடி வருவதில்லை

உன் முயற்சியின் தேடலுக்கு கிடைக்கும் பரிசு

-யாழ்_அகத்தியன்

———————————————————————-

தேடல் என்ற பசி இறக்கும்வரை

இருந்தால் வெற்றிகளே அதற்கான

உணவு

-யாழ்_அகத்தியன்

———————————————————————-

கட்டாயத்தில் வருவதல்ல காதல்

கட்டாயங்களை மீறி வருவதே காதல்.

-யாழ்_அகத்தியன்

—————————————————————

எதிர்க்கும் சக்தி இல்லாதவன்ஆசைப்படாமல் இருப்பதே சிறந்தது

-யாழ்_அகத்தியன்

—————————————————————–

ஆழமான நம்பிக்கை உன் இலக்கின் மீது இருந்தால்

நீ எத்தனை தடவை மூழ்கினாலும்

இலக்கின் கரையைசேர்ந்தே தீருவாய்

-யாழ்_அகத்தியன்

————————————————————————–

பணத்தின் மீது எனக்கு பொறாமை அதிகம்தான்

அது யாருடன் அதிகம் சேர்கிறதோ அவர்களை

அதிகமாய் உலகத்துக்கு பிடிக்கவைத்துவிடுகிறது

-யாழ்_அகத்தியன்

————————————————————-

தூண்டில் இல்லாமலே

சிக்கிக்கொள்றாய்

உன் நாவால் நீ 

-யாழ்_அகத்தியன்

———————————————————-

உன் நாவிற்கு தெரிந்த

உன் பலவீனம் அது

யாருக்கும்

சொல்லிக்கொடுக்கும் வரை

உனக்கே தெரியாது 

-யாழ்_அகத்தியன்

———————————————————–

தெய்வம் பேச ஆரம்பித்தால்

மனிதனாய் தெரிவான்

மனிதன் மெளனமாய் இருந்தால்

தெய்வமாய் தெரிவான். 

-யாழ்_அகத்தியன்

—————————————————-

துன்பமே பெரிய நோய்

அதற்கான தடுப்பு மருந்தே

மெளனம் 

-யாழ்_அகத்தியன்

——————————————————–

மெளனம் ஒரு

மொழிதான்

அது

மற்றவர்களை

பேச வைக்கிறது 

-யாழ்_அகத்தியன்

7 Responses to என் சிந்தனையில்…

  1. kavithaa says:

    hi yaal eppadi irukinga
    eppavom sogamakavee irunka yaal.

    nilavokku alagu IRUNDA VANAM
    vidiyalukku alagu SATHTHAM IDUM PARAVAIGAL
    panimegangaluku alagu MALAIGAL
    alagukku alagu KAVITHA
    kavithikku alagu YAAL KAVITHAI

    hahaha

  2. kavithaa says:

    vaalkai enbathu niranthiram illai…
    valvathukaga ulaikathee…..
    vaalthu kondee ula…. REALLY NICE Yaal

    Itha ellarum purigikka thavari vidurangalee….. eppavom money money
    Ivengal money ya theduranu SANTHOSAM yennum vaarthai aliththu vidurangalee

    NAMAKKUL NAAM ILLAVITTAL
    NAMMAI PARKUM KANGALUKKU
    NADAIPINAMAGAA THENPADUVOM…..

  3. உள்ளத்தின் ஆழத்தைத் தொட்டு உயிர்ப்பிக்கும் வரிகள்…
    அப்படியே இதையும் சேர்க்க முடியுமானு பாருங்க யாழ் அகத்தியன்…
    “தற்கொலை செய்வதற்கு, சாகடிக்கப் படலாம்”

    உங்கள நான் என்னோட Blog Roll-ல இணைத்துக் கொண்டேன். நன்றி.

  4. AADHIL says:

    பணத்தின் மீது எனக்கு பொறாமை அதிகம்தான்

    அது யாருடன் அதிகம் சேர்கிறதோ அவர்களை

    அதிகமாய் உலகத்துக்கு பிடிக்கவைத்துவிடுகிறது
    REALY NICE

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.