என் காதல் கவிதைகள்

மார்ச் 28, 2007

உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய

*

உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது

*

நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன்முதல்
உன்னை கனவு காண ஆரம்பித்தேன்

*

வருசையில் நின்று வாங்கப் போன
மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன்
மருந்தே இல்லாத காதல் நோயை

*

உன்னை பலமுறை சந்தித்த போதும்
என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான்
எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது
உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று

*

தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த
சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும் அது என்பதால்


-யாழ்_அகத்தியன்


கவியானேன் நான்!

மார்ச் 28, 2007

நீ சிரிக்க மறந்த உன் புகைப்படம் மீது
ஒரு கவிதை எழுதினேன் என்ன அதிசயம்
உன் கன்னக் குழிக்குள்ளே காணாமல் போனது
என் கவிதை

*

தினம் ஒரு கவி எழுதி
உன்னைத் தேட விட்டேன்
எல்லாமே களைப்பில் உன்
ரசிகைகளைத்தான் தேடித்தருகிறது

*

மது போதையிலும் எழுதி முடித்தேன்
உன் பெயரை தலைகிழாக
என் கவிதையாய்

*

என் கவிதைகள் எல்லாமே எழுதிய என்னை
விசாரிக்க வைப்பதைவிட உன்னைத்தான்
அதிகம் விசாரிக்க வைக்கிறது

*

எனக்கு பிறக்கும் கவிதைகள் எல்லாத்தையும்
நீ வாழவைக்க ஆசைப்படுகிறாயா_ஒன்று செய்
என்னை உன்னோடு கூட்டிச்செல்

-யாழ்_அகத்தியன்


என் உயிரானவளே

மார்ச் 24, 2007

என்னைப் பிரிந்து நீ எங்கோ வாழ்கிறாய்
இருந்தும் நீ பிரிந்ததை ஞாபகப்படுத்த
மறுக்கிறது என் காதலின் நினைவு

*

உன்னோடு வாழ்ந்த காலத்தைவிட
உன் நினைவுகளோடு வாழும்
காலம்தான் அதிகம் என்றபோதும்
என்னைக் கவலைப்பட விட்டதில்லை
உன் ஞாபகங்கள்

*

எரிக்க மனமின்றித்தான் எரித்தேன்
உன் கடிதங்களை அதன் எழுத்துக்களாவது
என்னோடு எரிந்துவிட வேண்டும் என்பதற்க்காக

*

என் கவிதைகள் எல்லாமே சோகத்தோடு
பிறப்பதால்த்தான் உன் கண்ணில் படமாலிருக்க
என் கையாலே கொள்ளிவைத்து விடுகிறேன்.

*

உன்னைச் சந்திக்கும் வரை உன் முகத்தை
யார் யாரோ முகத்தில் தேடிப்பார்த்தேன்
உன்னைப் பிரிந்த பின் என் முகத்தை யார் யாரிலோ
தேடிப் பார்க்கிறேன்

*

தயவு செய்து என் பெயரை
உன் பிள்ளைக்கு வைத்து விடாதே
நீ உயிரோடு இருக்கும் போதே
அனாதையாகிவிடும்

*

என் ஆயுளின் அந்தியிலாவது உன்னைச் சந்திக்க
நேர்ந்தால் உன்னிடம் சொல்லச் சுமக்க வார்த்தை
இதுதான் உன்னை நான் மறந்து விட்டதாகவே
நீ நினைத்து விடு என்பதே

-யாழ்_அகத்தியன்


என் கையில் உன் பேனா

மார்ச் 22, 2007

உன்னைத் சந்தித்து
சில மாதமே ஆனபோதும்
எப்படியானேன் உன்னவளாய்

இன்றுவரை உன்னை நேரில் சந்தித்ததே
இல்லையே எப்படி எப்படி_என்னை
உன் வசம் இழுத்தாய் எதற்காய்
உன் வசமானேன் எதுவும் புரியாதவளாய்

இதுவரை தூக்கம் வராமல் என் விழிகள்
துடித்ததே இல்லையடா ஏன் தான் இன்று
உன் பெயரை கோடி முறை உச்சரிக்கும் வரை
தூங்க விடுவதில்லை உன் நினைவு

உன்னை பொறுக்கி என்று கூட திட்ட
துணிந்தவள் நான்_ ஏன் தான் உன்னை
நீயே திட்டினால் கூட என் மனம்
பொறுப்பதில்லை

காதலை மதித்த போதும் நான்
காதலிக்க துணியாத கோழையாய்த்
தானிருந்தேன் எப்படி என்னை வாழ்ந்தால்
உன்னோடு என சொல்ல வைத்தாய் _சொல்
என்னவனே சொல்

என் கிறுக்கல்கள் என்றாலே கை தட்ட
பலர் இருந்த போதும்_என் கண்கள்
உன் கவிதைக்காகவே தினம் விடியவைக்கும்

என்னவனே நான் கிறுக்கி எறிந்த
காகிதத்தில்தானே இன்னும் கசங்கிக்கிடக்கிறது
நான் சொல்லத் துடிக்கும் என் காதல்


என்மேல் எனக்கே இல்லாத அக்கறையை
உன் மேல் கொண்டேன் அதனால்த்தானோ
கனவைக்கூட தினம் விழித்திரிந்து

காண்கிறேன்


உன் விழிபார்க்கும் தூரத்தில் நானில்லாதபோதும்
உன்னைக் காக்க எங்கோ ஓர் மூலையில் உன் இமையாக (வரக்)
காத்திருக்கும் நான்


-யாழ்_அகத்தியன்


உனக்கே நான்

மார்ச் 21, 2007

ஒழிந்து திரியும் காதலை தேடித்தான் திரிந்தேன்
யார் யாரோ முகத்தில்_ அது உன் இதயத்தில்
மறைந்திருந்ததை நீ காட்டிக் கொடுக்கும் வரை

உன்னைத் தேடித்தான் உலகம் சுற்றப் புறப்பட்டேன்
என்ன அதிசயம் என் வீட்டு வாசலிலே உன்னை
இறக்கி விட்டுப் போனது நீ சுற்றி வந்த தெய்வம்

உன்னை வைத்துக் கொண்டு உலகம் சுற்றிய
களைப்பில்த்தான் புரிந்து கொண்டேன்_ உன்னைவிட
யாரும் எனக்கு பொருத்தமில்லை என்பதை

என்னைக் கைதியாய்ச் சிறைப்பிடிக்க யார் யாரோ
முயற்சித்தார்கள் இறுதியில் நீதான் சிறைப்பிடித்தாய்
கைதியாயல்ல உன் காதலனாய் உன் கணவனாய்
ஆதலால் உனக்கே உரியவன் நான்.

-யாழ்_அகத்தியன்


காதலே வருவாயா

மார்ச் 19, 2007

வெற்றுக் கடதாசி!

மார்ச் 19, 2007

ஒவ்வொரு
வெற்றுக் கடதாசியை
நான் பார்க்கும் போதும்
உன் வெள்ள மனதைப்
பார்பதாய் உணர்கிறேன்
அதில்தானே நீ யார்
பெயரையும் எழுதவே
இல்லையே

-யாழ்_அகத்தியன்


வெற்றிடம்!

மார்ச் 19, 2007

நீ இல்லாத வெற்றிடத்தை
யாரல் நிரப்ப முடியுமென்று
எண்ணிக்கொண்டிருந்தேன்
உன் பிரிவுக்காய் அழப்போன
அனாதையின் மரணவீட்டின்
முலையில் நான்

-யாழ்_அகத்தியன்


வெக்கம்!

மார்ச் 19, 2007

நீ படிக்க வருவாய்
என்று பொய் சொன்னால்
போதும் என் கவிதைகள்
வயதுக்கு வந்து கிறுக்கலாய்
வெக்கப்படுகிறது.

-யாழ்_அகத்தியன்


விசம்!

மார்ச் 19, 2007

உன்னில் என்னை
சாக கண்டேன்
தெரிந்தும் -நீ
விசம் கொடுத்தாய்
உன் வருங்கால
மருத்துவ புருசனை நம்பி

-யாழ்_அகத்தியன்