ஏப்ரல் 26, 2007
தன்னை அணைக்காமல் உன்னை
அணைத்துக் கொண்டதற்காய்
இன்னும் அழுதுகொண்டே
இருக்கிறது மெழுகுவத்தி
*
கால்களைக் காப்பாற்றித் தந்த எங்களை
கழட்டிவிட்டுவிட்டு தங்களைக் காப்பாற்றச்
சொல்லி கோயிலுக்குள் பக்தகோடிகள்
*
கழித்த கல்லும் அத்திவாரத்துக்கு தேவைப்படும்
கவனம் என்பதை உனக்கு மாப்பிள்ளையானபோது
தெரிந்து கொண்டேன்
*
என் கவிதைத் திருடியை
தாலி கொண்டு சிறைப்பிடித்தேன்
என் மனைவியாக
*
நான் எழுதிய கவிதை இல்லை
ஆனாலும் சட்டப்படி சொந்தமாக்கிக் கொண்டேன்
உன் பெயரை
-யாழ்_அகத்தியன்
2 மறுமொழிகள் |
கவியானவளே… [04] |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
ஏப்ரல் 26, 2007
கனவில் வந்தவளைக்
கைகூப்பி வரவேற்றேன்
தூக்கத்தைத் திறந்து
*
என் கவிதைத் தலைப்பை
படித்துவிட்டு பொறாமைபட்டார்கள்
உன் பெயரை தெரிந்தவர்கள் மட்டும்
*
கையெழுத்து அழகானால் தலைஎழுத்து
நல்லா இருக்காதாம் உண்மையானது
உன்னால் அழகான என் கையெழுத்தால்
*
இடமில்லாமல் என்னை இறக்கிவிட்டுப் போன
படகில் ஏறிப்போனது என் காதல்
*
நீ என்னைப் பிரிந்ததை யார் கேட்டாலும்
நானாக பிரிந்தேன் என சிரித்தபடி சொல்லிவிட்டு
தூக்கத்தில் அழுகிறேன்.
-யாழ்_அகத்தியன்
2 மறுமொழிகள் |
கவியானவளே… [03] |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
ஏப்ரல் 26, 2007
கவிதை எழுதுவதை நிறுத்திவிட
நினைக்கும் போதெல்லாம் உன்
பெயரை எழுதி தொலைக்கிறது
என் பேனா
*
ஒவ்வொரு தூக்கத்திலும்
அடிக்கடி விழிக்க வேண்டி வருகிறது
உன்னோடு தூங்குவதாய் கனவு காண்பதால்
*
குடி குடியைக் கெடுக்கும்
என்பதை எழுதிவிட வேண்டும்
உன் உதட்டிலும்
*
காதல் பாடத்தில் இருவருமே
சித்தி அடைந்தோம் மறந்ததில்
நீயும் மறக்காததில் நானும்
*
நான் பயணிக்கும் பாதையெங்கும்
என் கவிதைகளை விதைத்துக்கொண்டே
போகிறேன் ஏதெனும் ஒன்றிலாவது
நீ இழப்பாறுவாய் என்ற நம்பிக்கையில்
*
யாரவது எனக்கு எழுந்து நின்று
இடம் தர மாட்டார்களா என
உதைக்கிறது உன் நினைவு
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
கவியானவளே… [02] |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
ஏப்ரல் 24, 2007
என் கைக்கெட்டியதில்
வாய்க்கெட்டத் தவறியது
என்றும் நீ மட்டும்தான்
*
கிடைத்தது எல்லாம்
பெரிதாகவே தெரிந்தது நீ
கிடைக்காமல் போகும் வரை
*
உன் நினைவுகளுக்கு
ஆடை மாற்ற வேண்டும்
கொஞ்சம் என்னைத் தூங்க
விடுகிறாயா
*
நீ வேண்டும் என்பது என் பழைய கவிதை
நீ மட்டும் வேண்டும் என்பது என் புதுக் கவிதை
*
நீ வாங்கிக் கொடுத்த செருப்பு
உன்னைவிடக் கடிக்க ஆரம்பிக்கிறது
நான் மது அருந்த போகையில்
-யாழ்_அகத்தியன்
1 மறுமொழி |
கவியானவளே... [01] |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
ஏப்ரல் 15, 2007
உன் ஒவ்வொரு தூக்கத்திலும்
என் கனவு பலிக்கிறது என் கனவு
ஒவ்வொன்றிலும் என் காதல் தூங்குகிறது
*
உனக்குத் தெரியாது உன் தூக்கத்தில்தான் நான்
கனவு காண்பவன் என்று ஆனால் எனக்குத் தெரியும்
நீ என்னைக் காண்பதற்க்காய் தூங்கச் செல்வதில்லையென்று
-யாழ்_அகத்தியன்
3 மறுமொழிகள் |
கனவே கலையாதே! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
ஏப்ரல் 6, 2007
கவிதை எழுத நேரம் ஒதுக்கினேன்
உனக்கு கடிதம் எழுதும் நேரம்
என்பதை மறந்து
தயவு செய்து நான் மறந்ததுக்காக
என் கடிதத்தை மேலோட்டமாக
படித்துவிடாதே எனெனில் உன்னைச்
சேரும் இந்த கடிதம் என் பல கடிதங்களை
தோற்கடித்த பெருமைக்குரியது.
-யாழ்_அகத்தியன்
2 மறுமொழிகள் |
என் கடிதம்..! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
ஏப்ரல் 2, 2007
என்னைக் கோவப் படுத்தியதுக்காக
உன் மேல் நீ கோவப்படுகிறாய்
உன்னைக் கோவப் படுத்தியதுக்காக
என் கோவத்தை வெறுக்கிறேன்
*
என்னால் உன் கோவங்களை
புரிந்து கொள்ள முடிவதில்லை
ஒரு விதத்தில் அதுவும் உதவி
செய்கிறது எனக்கு ஆங்கிலம்
புரியாததால்
*
உன் கோவத்தை என் மேல் இறக்கி வைத்துவிட்டு
போய்விடுவாய் பாவம் நான் படாத பாடுபடுகிறேன்
உன் கோவத்தை யாரிடமாவது இறக்கி வைக்க
*
உன் ஆசையை காட்டுவதற்காக இப்பிடியா
வார வாரம் என்கூட கோவம் போட்டு
பேசாமல் விடுகிறாய் சில தினங்கள்
*
உன்னை அழகாய் எனக்கு காட்ட விரும்புகிறாய் என்றால்
சொல்லி இருக்கலாமே உனக்கு விரும்பிய அழகுசாதனப்
பொருட்கள் வாங்கி தந்திருப்பேனே அதை விட்டுட்டு ஏன்
என் மேல் அடிக்கடி கோவித்துக் காட்டுகிறாய்
*
உன் கோவங்களை விதைப்பதற்கு
என் மனசா கிடைத்தது பாவம்
அது வளர என் கண்ணிரைக் கடன்
கேக்கிறது
*
இதுவரை நீ என்னோடு கோவித்தது
மீது எனக்கு சந்தேகம் வந்ததில்லை
கடைசியாக நீ என்னோடு கோவப்பட்டதில்தான்
சந்தேகம் ஏனெனில் உன் கோபத்தை
நான் கவிதையாக்கி இருக்கிறேனே
-யாழ்_அகத்தியன்
4 மறுமொழிகள் |
கோவப்படும் கோவங்கள் |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
ஏப்ரல் 1, 2007
உண்மை சொன்னால் சிரிக்கிறாய்
பொய் சொன்னால் வெக்கப்படுகிறாய்
இதனால்த்தான் என் உயிர் எழுத்துக்களும்
அடிக்கடி மெய் எழுத்துகளாக மாறுகிறது
*
உன் வெக்கத்தை படம் பிடிக்க ஆசைதான்
என்ன செய்ய இதுவரை என்னை
எடுக்க விட்டதில்லை உன் வெக்கம்
*
நிச்சயமாய் உன் வெக்கத்தை யாரிடமும்
கற்றுக் கொண்டிருக்க மாட்டாய்
ஏனெனில் என்னிடம் மட்டும்தானே
நீ வெக்கப் படுகிறாய்
*
நான் என்னைப் பற்றி சொன்னால்
ரசிக்கிறாய் உன்னைப் பற்றி சொன்னால்
வெக்கப் படுகிறாய் ஆகா உன் வெக்கத்துக்கும்
பழக்கி விட்டாயா உன் சுயநலத்தை
*
நான் மயிலே மயிலே என்று அன்பாய் கூப்பிட்டாலும்
மயில் இறகு போட்டதில்லை ஆனால் நான் ஆசையாய்
உன் பெயரை கூப்பிட்டால் போதும் அடடா
நீ அழகாய் வெக்கப்படுவாய்
*
என்னைக் கண்டதும்
வெக்கப் படுகிறாய்
நீ வெக்கப் பட்டதும்
நான் காணாமல் போகிறேன்
*
என் காதுகள் பொய் சொல்லலாம்
என் கண்கள் பொய் சொல்லாது ஆமாம்
உன் வெக்கம் பேசியதில்லையே
*
உன் வெக்கத்தை பற்றி கவி எழுதித்தர
ஆசைதான் ஆனால் அந்தளவுக்கு நான்
படித்தவன் அல்ல வேணும் என்றால் சொல்
நீ வெக்கப் படாத நேரங்களை கவிதையாய்
எழுதித்தருகிறேன்
-யாழ்_அகத்தியன்
5 மறுமொழிகள் |
நீயும் நானும்....! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.