மே 18, 2007

கோயில் வாசலில் காத்திருக்கும்
பிச்சைக்காரனாய் காத்திருக்கிறேன்
உன் வீட்டு வாசலில் உன்
புன்னகைக்காய்*
தயவு செய்து இனி நீ
குளிக்கும்போது பஞ்சாயத்தில்
அறிவித்தல் கொடுத்து விட்டு
குளி ஏனெனில் நீ குளிக்கும் போது
ஊர் கிணறு எல்லாம் வைற்றிவிடுகிறது
*
நீ ஊர் கோயிலில் பாடிய
தேவாரத்தை கேட்டு சாமியாக
ஆசைபட்டதில்லை
நீ யாரோ ஒரு அனாதையின்
இறந்தவீட்டில் பாடிய புராணத்தை
கேட்டுத்தான் அனாதையாய் இறந்து
போக ஆசைப்பட்டேன்
*
நீ படிக்கும் கல்லூரியில்
ஆண்களும் சேர்ந்துதான்
படிக்கிறார்கள் நீ வராத
நாட்களில் மட்டும்தான்
பெண்கள் கல்லூரியாய்
மாறுகிறது
*
களைப்பில் எந்த இடத்திலும்
இளைப்பாறிவிடாதே அந்த இடத்தில்
இளைப்பாறியே களைத்து போகிறேன்
நான்
-யாழ்_அகத்தியன்
2 மறுமொழிகள் |
கவியானவளே...[07] |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
மே 18, 2007

உன்னைப் பூ என்று
யார் சொன்னதுநான் சொல்ல மாட்டேன்
உன்னை யாரும் பறிக்காத
போதும் நீ இன்னும்
வாடவில்லையே
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
ரோஜா |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
மே 17, 2007

காதலில் வென்ற என் அப்பாவின்
எதிர்ப்பை மீறி சேர்த்து வைத்தார்
காதலில் தோற்றுப் போன
என் சித்தப்பா என்னையும்
அவளையும்
*
என் அன்னையை வயோதிபர் இல்லத்துக்கு
அனுப்பி வைத்த என் மனைவி மறந்து விட்டாள்
தன் பிள்ளைக்கு வயோதிபர் இல்ல முகவரியை
காட்டிக் கொடுத்ததை
*
நீங்கள் அழுத்திய இலக்கம்
இப்போது பாவனையில் இல்லை
என்று அழகாய் சொல்கிறாள் யாரோ
ஒருத்தி
என் மேல் அவளுக்கு இருக்கும்
அக்கறை கூட இலக்கத்தை
மாற்றிய உனக்கில்லையடி
*
தெரிந்தோ தெரியமலோ
அதிகமாய் வெளி நாட்டு
ஆண்கள்தான் விதவைக்கு
வாழ்க்கை கொடுக்கிறர்கள்
புரியவில்லையா…
உள் நாட்டுக் காதலனை சாகடித்து
விட்டல்லவா கழுத்தை நீட்டுகிறாள்
வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு
*
கவிஞர்களிடம் காதல் தோல்வியா
என்று கேக்கும் பெண்களிடம் ஒரு கேள்வி
கேக்க வேண்டும் உங்கள் பெயர்களை
வைத்த தந்தையும் காதலில்
தோற்று போனவரா என்று
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
எழுத மறந்த கவிதைகள் |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
மே 17, 2007

என் காதல் கவிதையில் இருந்து
விலக்கி விடப்படும் பிழையான
எழுத்துக்களோடு சென்று விடுகிறது
உன் மேலான என் காதலும்
*
என் கவிதைகள் கூட உன்னை
காயப்படுத்த கூடாதென்றுதான்
எழுத்துப்பிழை விட்டாலும் ஆயுத
எழுத்தை விட்டதில்லை என் கவிதைக்குள்
*
தயவு செய்து என் கவிதைகளை
வாசித்துவிட்டு அமைதியைப்
பேணுங்கள் கல்லறையில் என்
பேனா தூங்கிக் கொண்டிருக்கிறது
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
கவியானவளே...[06] |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
மே 13, 2007

உன்னைப் போல்
சமைக்க தெரியாது
என் மனைவிக்கு
ஆனாலும்
அவள் கைவிரலில்
உன் கைவாசம்
நீ பிடித்து தந்தவள்
அல்லவா..
*
என்னை பாதுகாப்பாகத்தான்
வைத்திருக்கிறாள் என் மனைவி
ஆனாலும்
பயமாக இருக்கிறது உன்
கருவறையில் இல்லை நான்
*
உன் மடியில் தூங்கும்
தூரத்தில் நானில்லை
என்பதால்த்தான்
என் மடியில் தூங்கிக்
கொண்டிருக்கிறது
எல்லா துக்கங்களும்
-யாழ்_அகத்தியன்
2 மறுமொழிகள் |
அன்னையர் தின கவிதை |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
மே 11, 2007
உனக்கு பிடித்தவர்களின்
பட்டியலில் என் பெயர்
இல்லையென்றாலும்
உனக்கு பிடிக்காதவர்களின்
பட்டியலிலாவது என் பெயருக்கு
முதலிடம் கொடுத்து விடு
அந்த புகழ் போதும் என்
பெயராசைக்கு
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
பெயராசை.. |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
மே 11, 2007
உன்னை மட்டும்
காதலித்தேன்
என்பதை மறந்தாய்
உன்னால் கவிஞனாக்கப்
பட்டேன் என்பதையும்
மறந்தாய்
உன் மறதி கூட
எனக்கு பிடித்திருக்கிறது
நீ மறந்த எதுவும்
உருப்பட்டதில்லையே
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
நீ மறந்த எதுவும்...... |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
மே 10, 2007

எனக்குள் அவளை
புதைத்து வைத்தாள்!
என்னை எனக்குள்
தேட வைத்தாள்!
விதியிடம் மதியை
கெஞ்ச வைத்தாள்!
தெய்வத்தால் என்னை
தேட விட்டாள்!
அடி வாங்காத என்னிதயத்தை
இடி தாங்க வைத்தாள்!
விழியை மூட வைத்து
மொழிக்குள் என்னை விட்டு
வார்த்தைகளைத் தேட வைத்தாள்!
படிக்காத என்னைக் கொண்டு
படிக்காத வார்த்தைகளால்
கவி வடிக்க வைத்தாள்!
என்னைக் கவிஞனாக்கி விட்டு
கணவன் வீட்டுக்குப் போனவளே!
காத்திருக்கும் என் கவிதைகள்
காலமெல்லாம் உன் கண்களுக்காய்…
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
காத்திருக்கும் கவித |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
மே 9, 2007

என்னவனே….
உன்னை நினைத்து நினைத்து
வாழ வேண்டும் உந்தன் மடியில்
உயிர் துறக்க வேண்டும் வருவாயா?
காலை மாலையாவதும் மாலை
காலையாவதும் உந்தன் ஆசைக்குள்
மறையவேண்டும் வருவாயா?
எந்தன் கோட்டையை விட்டு நீ
போனாலும் நீ போட்டு விட்டுபோன
கோடுகள் ஆறவில்லைஅதற்காகவேனும்
வருவாயா?
கோழி கூவினாலும் கோயில் மணி
அடித்தாலும்கோலம் போட மறந்தாலும்
உந்தன் மடியில் மறக்க வேண்டும்
அதற்காகவேனும் வருவாயா?
கனவில் நான் குளித்து நினைவில்
காய்கிறேன் என்னை உடுத்திக்கொள்ள
உண்ர்வோடு வருவாயா?
அங்கத்தில் இடம் பிடித்தாய் ஆசையை
தூண்டி விட்டாய் அனுபவத்தை கொளுத்தி
விட்டாய் அணையாமல் எரிகிறேன்
அதற்காகவேனும் வருவாயா?
கோடை மழையாய் நீ வந்தாலும்
காதலாஅடை மழையாய் வரவேற்பேன்
அதற்காகவேனும் வருவாயா?
இரவைக் காட்டிக்கொடுக்கும் நிலவைப் போல
எந்தன் வெக்கத்தைக் காட்டிக் கொடுக்க
இரவில் வருவாயா?
ஊமையான உலகத்தில்உன்னோடு
பாட வேண்டும் துடிக்காத நரம்பெல்லாம்
இசைக்க வேண்டும் அதைக்கேட்டு நீ ஆடிக்
களைக்க வேண்டும் அதற்காகவேனும் வருவாயா?
மறந்து விட்டாயா நம் தனிமை பிரிந்து
நான்கு மாதமாச்சு எங்கே ஒருதடவை
வந்து பிரிந்து விடு
நாளாக நாளாக நான் பழுக்கிறேன்
நீ சுட்ட பழம்தானேடா நான்
பரிமார வருவாயா?
இரவும் நானும் சேர்ந்தால் ஏக்கம்
நீயும் நானும் சேர்ந்தால் வெக்கம்
என் ஏக்கத்தை களைந்து விடு
என் வெக்கத்தை பார்க்கவேண்டும்
உன்னோடு நான்அதற்காகவேனும்
வருவாயா?
வருவாயா காதலா வருவாயா
உன் வரவுக்காய் நான் வழியாகிறேன்
என் வாசல் எங்கும் விழியோடு
காத்து கிடக்கிறேன் வருவாயா
காதலா வருவாயா?
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
என்னவனே வருவாயா? |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
மே 6, 2007

உன்னோடு பயணித்து
என் தரிப்பிடத்தில்
இறங்கியபின் உன்னை
வழியனுப்பிவைத்த
பயணியல்ல நான்
மாறாக…..
திசைகாட்டி இல்லாத
தேசத்தில் என்னை
இறக்கிவிட்டுப் போன
என் சாரதி நீ
-யாழ்_அகத்தியன்
2 மறுமொழிகள் |
என் சாரதி நீ |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.