காதல் பாடம்

ஜூலை 17, 2007

1

உன்னை மறக்க முயற்சித்து
தோற்ப்போனதில்த்தான்
கற்றுக்கொண்டேன்

உன்னை நினைத்து வாழ்வது
எப்படி என்று

-யாழ்_அகத்தியன்


கவியானவளே…[10]

ஜூலை 10, 2007

உனக்காக ஏதாவது
எழுதும் போதுதான்

எழுத்துக்களின்
நெருக்கடியில் சிக்கி
மூச்சு விட இடம்
தேடுகிறது என் காதல்

*
என்னைப் போல் யாரும்
கண்ணைத்தானம் செய்வதை
பார்த்துவிட்டு இறந்து போயிருக்க
மாட்டார்கள்

ஆனால்

கண்ணுக்கும் தெரியாது
நான் இறந்து போனது
அவள் திருமணவீட்டில் என்று

*
உனக்காகவே உழைத்ததில்
உன்னை வாங்க மறந்துவிட்டேன்
என் மனதையும் உன்னிடம் கொடுத்ததால்

*
நதியாக ஓடி வா என்றாய்
வந்த பின்தான் தெரிந்தது
என்னை உன்னோடு
கலக்க அல்ல
கரைக்கத்தான்
வரச் சொன்னாய்
என்று

*
உன் ஆடையின் அழகில்
உன்னழகு யாருக்கும்
தெரியக் கூடாது என்பதிலும்
நான் அக்கறையாக இருந்ததில்

தோற்த்தான் போனேனடி உன்
ஆசைக் கணவரிடம்

-யாழ்_அகத்தியன்


தத்துவம்

ஜூலை 10, 2007

chellam2

இன்று பார்த்தவனோடு ஓடிப் போன
பூவிடம் சொன்னது மரம் _உன்னை
பூக்க வைத்த எனக்குத் தெரியாத
உன்னை பழமாக்க என்று

-யாழ்_அகத்தியன்


எதிர்பார்ப்பு

ஜூலை 9, 2007

நானாவது கொடுக்கிறேன்

உனக்கு யாரோ ஒருவனின்
கவிதை பிடித்ததில்
இருந்து கிறுக்கிக்
கொண்டுதானிருக்கிறேன்

என்னில்
ஏதாவது ஒன்று உனக்கு பிடித்ததில்
கவிதையாவது இருக்கட்டுமே என்று

-யாழ்_அகத்தியன்


கவியானவளே…[09]

ஜூலை 8, 2007

5

நான் உன்னை நினைப்பதை
மறந்துவிடப் போவதில்லை
அது என்னை மறக்கப் பார்க்கிறது

*

என் எதிரியல்லக் காதல் அனாலும்
சுட்டுக் கொண்டேன் அதன் எதிரியால்
சாகக்கூடாது என்பதால்

*

நீதான் அடைகாக்கிறாய் என்பதற்காய்
என் காதல் முட்டையை உடைத்துவிடாதே
நானாக உடைத்து வெளிவரும் வரை

*

அவள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்
மறந்து தொலைத்த பாதையில்_ நான்
என்னைத் தேடி எடுத்துக் கொண்டேன்
அவளை நினைத்து வாழ

*

என்னை மறப்பதற்காய் நான்
இறந்து விட்டதாக நினைத்து
விடாதே ஏனெனில் நீ வாழ்ந்து
கொண்டிருப்பது யுத்த பூமியில்
-யாழ்_அகத்தியன்


கவியானவளே…[08]

ஜூலை 4, 2007

எப்படி இப்படி

 கோயிலைத்தான் சுற்றிவருகிறார்கள்
உன்னைத் தருசிக்காத பக்தர்கள் மட்டும்

*

உனக்காகவே நட்டு வைத்த பூச்செடியில்
யார்யாரோ பறித்து செல்கிறார்கள் தங்கள்
காதலியை கண்டுபிடித்தவர்கள்

*
என் காதல் திருமணத்தில் முடியவில்லைத்தான்
ஆனாலும் மரணம்வரை வாழ்த்திருக்கிறது
இல்லையென்றால் தற்கொலை செய்திருப்பேனா…?

 *

என்னைப்போல் யாரும் உன்
அமைதியை விரும்ப மாட்டார்கள்
உன் கீழ் உதடாய் நீ
மாறும்போதும்
உன் மேல் உதடாய்
நான் மாறும் வரையிலும்

*

இன்றுவரை காதலோடு வரும் எந்த பெண்களுடனும்
நான் உரையாடியதில்லை காரணம்
எனக்கே தெரியாத உனக்கு துரோகம்
செய்யக் கூடாது என்பதால்

*

முடிந்தவரை உன் வீட்டுக் கண்ணாடி முன்
நின்று என்னோடு உரையாடு
எத்தனை தடவை என்னை
பொறாமை படவைத்தது என்று
எனக்குத்தான் தெரியும்

*

ஒரு வார்த்தை கூட பேசாத உன்னோடு
தினமும் பேசிய களைப்பில்தான் விடிகிறது
என் ஒவ்வொரு தூக்கமும்

-யாழ்_அகத்தியன்