கவியானவளே…[11]

ஆகஸ்ட் 26, 2007

 thimir 1

சிறு துளி பெருவெள்ளம்
உன் கூந்தல் துவட்டியபின்னும்
தூறும் துளிகள் எனக்கு

*

உன்னைக் காதலித்ததால் அல்ல
நீ என்னை காதலிக்காததால்தான் ஆனேன்
கவிஞனாய்

*
விரும்பித்தான் காதலித்தேன் உன்னை
விரும்பாமல் காதலிதுக்கொண்டே இருக்கிறது
கவிதைகள் மட்டும் என்னை

*

நீ சூடும் பூவுக்கு எப்படி
கற்றுக்கொடுத்தாய்
நீ சிரிக்காத போதும் சிரிக்க

*

உன் கண்களில் படித்துவிட்டுத்தான்
வெளியிடுகிறேன் என் ஒவ்வொரு
கவிதைகளையும் பல கண்களுக்காய்

*

உன்னைக் காதலித்ததால்
தலைக்கனம் எனக்கு
நீ காதலிக்காததால்
தலைக்கனம் என்
கவிதைகளுக்கு

-யாழ்_அகத்தியன்


பிடிவாதம்

ஆகஸ்ட் 23, 2007

நீ அனுப்பும் மின்னஞ்சல் கூட
உன்னைப்போல் மெதுவாகத்தான்
வருகிறது பிடிவாதத்தோடு
வருவதால்

-யாழ்_அகத்தியன்


கைதியாய் நான்

ஆகஸ்ட் 14, 2007

என்னை அழகாய் ஏற்றிவிட்டாள்
குற்றவாளிக் கூண்டில் _ அனுபவிக்கிறேன்
அவள் எனக்கு செய்த குற்றங்களுக்கும் சேர்த்து தண்டனையை

-யாழ்_அகத்தியன்