ஈரமில்லா ரோஜா..!

செப்டம்பர் 28, 2007

user posted image

நீ வீசும் காற்றுக்காய்
காதலால் துளைக்கப்பட்ட
குழலே என் இதயம்

*

நீ
எனக்குக் கொடுத்த தண்டனை
எது தெரியுமா..? கடலில் வாழ்ந்த
என்னைக் காப்பாற்றுகிறேன் என
தொட்டிக்குள் கொண்டு வந்ததுதான்

*

நீ என்னில் முளைத்ததும்
நான் உன்னில் முளைக்காமல்
போனதிலும் தெரிந்து கொண்டது

ஒரே விதையென்றாலும் வேர்விட
எல்லா மண்ணும் சம்மதிப்பதில்லை
என்பதுதான்

*

உன்னால் புகைக்கப்பட்ட
சிகரட் நான் என்றாலும்
உனக்கு முன்னே இறந்துபோன
பாக்கியசாலி நான்

*

என் வாழ்க்கை எனும் பேருந்தில்
இறங்கிப் போன மறக்க முடியாத
சாரதி நீ

-யாழ்_அகத்தியன்


தொட்டால் சிணுங்கி

செப்டம்பர் 27, 2007

உன்னைக் கண்டவன்
கண்களுக்கு கண்டதில்
எல்லாம் நீ

*

நான்
சுட்ட கவிதை
உன் பெயர்
யாரும்
சுடாத கிறுக்கல்
என் பெயர்

*

உன்னோடு புடவைக் கடைக்கு
வந்தால் நான் தலையாட்டும்
பொம்மையாகிவிடுகிறேன்

நீதான்
எந்த சேலையிலும்
அழகாய் இருக்கிறாயே

*
உன் கண்களைத் தானம்
கொடுக்க விரும்பினால்
ஊமைப் பெண்ணுக்கு கொடு
அவளும் வாயாடியாகட்டும்

*

உனக்கு எந்த சேலையும்
அழகுதான் அதைவிட அழகு
சேலை கட்டும் போது நீ

-யாழ்_அகத்தியன்


நினைவில் ஒரு காதல்

செப்டம்பர் 25, 2007

காதலைவிட
காதலர்களே
உனை அதிகமாய்
நினைவு படுத்துகிறார்கள்
*

நீ
வாசிக்கிறாயோ
இல்லையோ உன்னால்
பலர் வாசிக்கிறார்கள்
என் கவிதைகளை

*

நீ
அறிவாளிதான்
எழுத்துப் பிழைவிட்ட
என் கவிதைகளை கண்டும்
சுட்டிக் காட்டாமல்
வாசிக்கிறாயே

*

எனக்கு கிடைக்காமப்
போன அழகான பரிசு நீ
உன்னால் கிடைத்த அசிங்கமான
பரிசு என் பேனா

*

உனக்காக எழுதிய
கவிதைகளை
மறந்துவிட்டேன்

உன்னால் எழுதிய
கவிதைகளைத்தான்
ஞாபகம் வைத்திருக்கிறேன்

தயவு செய்து
நான் மறந்ததையாவது
வந்து ஞாபகப்படுத்திவிட்டுப்
போ..

மறுபடியும் நான்
காதலனாக வேண்டும்

-யாழ்_அகத்தியன்


ஒரு நாள் ஒரு கனவு

செப்டம்பர் 24, 2007

13

மொழி தெரியா வயதில்
கண்களில் இதமாய்
தினம் நீ திரையானபோதும்
உனை நான் உணரவில்லை…

தலையணையின் துணையோடு
தனியாய் நான் தூங்கியபோதும்
வானவில்லாய் நீ வந்து
போனபோதும் உனை நான்
உணரவில்லை……

கறுப்பு வெள்ளையாய் என்
வாழ்வு ஆனபோதும் பல
வர்ணங்களாய் நீ வந்த
போதும் உனை நான்
உணரவில்லை….

நூற்றுக்கணக்காய் நான் கவி
எழுதிய போதும் என் பெயரே
பிடித்த கவிதை என்று அழகாய்
கண்களில் முத்தமிட்ட தேவதையை

கனவே நீ…..

காட்டிக் கொடுத்தபோதுதான்
உணர்ந்தேன் உன் சேவையையும்
என் பெயரின் இனிமையையும்

-யாழ்_அகத்தியன்


காதலே போ…

செப்டம்பர் 22, 2007

உன்னால் கவிஞன்
ஆனதிலிருந்து

உனக்காக எழுதி எழுதி என்
அயுளைக் குறைத்துக் கொண்டத்துதான்
மிச்சம்

நீ
என்னை புரிந்து கொண்டதுமில்லை
இனியும் புரிந்து கொள்வாய் என்ற
நம்பிக்கையும் இல்லை

நீ
என்னை வாசித்ததில்தான்
தவறு என்று எண்ணியிருந்தேன்
இப்போதுதான் புரிகிறது
உனக்கு தெரிந்த மொழியில்
நானிருக்கவில்லையென்று

என்னை உனக்கு
விளங்கப்படுத்திக்
கொண்டேயிருக்க
என்
அயுளை உனக்காக
கரும்பலகையாக்க முடியாது

பொறுமைக்கும்
எல்லை இருக்கிறது

தண்ணீர் கூட மூன்று
தடவைக்குமேல்
பொறுக்காது

நான்
எத்தனை ஆண்டுகள்
பொறுப்பது

நீ
என்னை புரிந்து
கொண்டு வருவாய்
என்று

போதும் இதுவரை
உனக்காக கவிதையோடு
நான் காத்திருந்தது

நான் ஒன்றும் உன்
பாலர் ஆசிரியர் அல்ல
நீ எதை எறிந்தலும்
நீ எதை செய்தாலும்
அதை பொறுத்துக் கொண்டு
கற்றுக் கொடுக்க

காணும் இதுவரை
என் கவிதைகளால்
நீ அழகானதும்
நீ சந்தோசப்பட்டதும்
என்னை ஒரு கிறுக்கன்
என்று நினைத்து நீ
சிரித்ததும்.

ம்ம்..
என்ன சிரிக்கிறாயா?
சிரி செல்லம் சிரி
ஆசை தீர சிரி

இதுதான் நீ என்னை
நினைத்து சிரிக்கும்
கடைசி சிரிப்பு

ஏன் தெரியுமா?
நன்றிக்கடனுக்காய்
இதுவரை உனக்கு மட்டுமே
கவிஞனாக இருந்த நான்

இன்றுமுதல்
இந்த உலகத்துக்கு மட்டுமே
கவிஞனாக இருக்க போகிறேன்.

என்ன கவலைப் படுகிறாயா?
கவலைப் படாதே இனி உனக்காக
என் பேனா தலைகுனியாது
இது உறுதி.

என் கவிதையில்
உன்னை அழகாய்
உக்கார வைத்த நானே

உனக்கு அர்த்தங்கள்
புரியாததால் இந்த
கவிதையோடு

உன்னை
மறந்துவிடுகிறேன்
என்னை
மன்னித்துவிடு

-யாழ்_அகத்தியன்


தரிசனமானவளே…

செப்டம்பர் 22, 2007

 

உன்
அமைதியான
வேண்டுதலால்
பொறுமையை
இழந்திருப்பாள்
பூமாதேவி

*

நீ
சுற்றி வந்ததால்
சனிஸ்வரனுக்கு பிடித்தது
தேவதை தோசம்

*

நீ
முருகனைச்
சுற்றுகையில்

முருகன் மீது
சந்தேகப் படுகிறார்கள்
வள்ளியும் தெய்வானையும்

*

அழகானவள்
கிடைக்க வேண்டும்
என்று வேண்டிக்
கொண்டிருந்தவர்கள்
எல்லாரும்

உன்னைக் கண்டதும்
தேவதை கிடைக்க வேண்டும்
என்கிறார்கள்

*

கடைசியில்
எனக்கும் சந்தேகம்
வந்துவிட்டது

பக்தர்கள்
உன்னைச் சுற்றுகிறார்களா?
கோயிலைச் சுற்றுகிறார்களா?

-யாழ்_அகத்தியன்


காதலாகி

செப்டம்பர் 21, 2007

முத்தபூமி6 

நம் வாய்ச் சண்டைகளை
எல்லாம் முடித்து வைக்கிறது
நம் இதழ்கள் ஒன்று சேர்ந்து

*

பலர் என் மேல்
படர்ந்தபோதும்
என்னுள் முளைத்தது
நீ மட்டும்தான்

*
நீ நடுங்கி நடுங்கி தந்த
உன் முதல் முத்தத்தை
என்னால் இன்னும்
மறக்க முடியவில்லை

நிலா நடுக்கத்தில்
பயந்து பயந்து
வாங்கியதால்

*

நீ
பூச் சூடி பொட்டு
வைக்கும்போது
முடித்து வைக்கிறேன்
உனக்கான

என் அன்றைய
கவிதையை

*

அடிக்கடி நீ காணாமல்
போகும் தருணங்களில்தான்
உணர்கிறேன் நீ தேவதை
என்பதை

-யாழ்_அகத்தியன்


வலிக்காமல் வாழ்க்கை இல்லை

செப்டம்பர் 20, 2007

 அண்டம் கடவுள்

வாருங்கள் பக்த கோடிகளே
உங்கள் வேண்டுதல்களை
என் மேல் உடைத்து

எனக்கும் சேர்த்து
வேண்டிக் கொள்ளுங்கள்.

என்றாவது நான்
இதே கோயிலில்
சிலையாக வேண்டும்
என்று

நீங்களே கூறுங்கள்
எத்தனை நாள்
மட்டும்தான்
நான் வாசல் கல்லாய்
இருப்பது.

எதிலும் இறைவன் இருப்பான்
என்பதை நம்பும் நீங்கள்

ஏன்?

என்னை மட்டும் கல்லாய்
எண்ணி எண்ணுக்கணக்கின்றி
உங்கள் நேத்திக்காய்….

என் மேல் தேங்காய்களால் எறிந்து
என்னைக் காயப்படுதுகிறீர்கள்.

உண்மையைச்
சொல்லப் போனால்

இதே கோயிலுக்கு நானும்
சிலையாக வேண்டும்
என்றுதான் வந்தேன்.

நான் சிற்பியின் உளிக்கு
பயந்ததால் என்னை வாசலிலே
விட்டுவிட்டார்கள்
தேங்காய்களால் சிலையானால்
வணங்க வைப்பதாகக் கூறி.

பார்த்தீர்களா….
பக்தர்களே…..
நான் உளிக்கு பயந்ததால்தான்
என்னை ஊரே சேர்ந்து குட்டுகிறது.

எனவே
என் நிலையைப்
பார்த்தாவது புரிந்து
கொள்ளுங்கள்.

பயந்தால் வாழமுடியாது என்பதை.

பரவாயில்லை எனக்குப் பழகிப்போச்சு
கொண்டுவந்த தேங்காயை என் மேல்
உடைத்துவிட்டு தெரிந்து கொள்ளூங்கள்.

வலிதாங்கும் இதயத்தைத்தான்
வாழ்க்கை வணங்கும்
குட்டு வாங்கும் தலையென்றால்
குட்ட மட்டுமே செய்யும் இந்த
உலகம் என்பதை.

-யாழ்_அகத்தியன்


பூவானவளே..

செப்டம்பர் 19, 2007

முத்தபூமி7

 

உனக்கு சந்தேகம்
அதிகம்தான்
இல்லையென்றால்
எதற்காக உன்னோடு
நட்சத்திரங்களையும்
கூட்டிப் போகிறாய்

*

என் இதயக்
கரும்பலகையில்
உன் பெயரே நிலவு

*

உன் இதழைத் தொட்டுக்
கொடுப்பதால்தான்
கேட்டு வாங்குகிறாய்
என் முத்தங்களை

*

முத்தக் கவிதைக்காய்
என் காது மடலையும்
விட்டு வைக்கவில்லை
உன் இதழ்கள்

*

அம்மா எவ்வளவுதான்
சுற்றிப் போட்டாலும்
உன் கண்படும் இடத்தில்
எப்போதும் நான்

-யாழ்_அகத்தியன்


கவிதையே தெரியுமா..?

செப்டம்பர் 18, 2007

தலைப்பின்றி
ஒரு கவிதை
அவள் பெயர்

*

வார்த்தைகள் வற்றிவிட்டது
கலந்து பேச வரச் சொல்லுங்கள்
என்னை ஏமாற்றியவளை
ஆணையிட்டான் கவிஞன்

*

காதலியின் பெயரை
வைக்க சம்மதித்தாள்
என்னால் தாயான
மனசை புரிந்த மனைவி

*

தாரம் தாயானதில்
புரிந்து கொண்டேன் ஏன்
தாரத்துக்கு முன் தாய்
என்பதை

*

இருந்த இடத்தில்
இருந்து உலகம் சுற்றுகிறாள்
என் கவிதையில் அவள்

*

கவிஞனின்
கல்யாணவீட்டில்
கவலைப்பட்டாள்
கவிஞனாக்கியவள்

*

கவனமாக இருக்கிறான்
காதலிக்கு கவிதை எழுதுபவன்
ஆயுத எழுத்தை பாவிக்கக் கூடாது
என்பதில்

*

காதலிக்கே மிஞ்சவில்லை
எப்படித் தானம் செய்வேன்
என் கவிதைகளை
அன்னைக்கு சொன்னான்
கவிமகன்

*

உனக்கு பிடிக்காத
என் கவி(குழ ந்)தைகளை
நீயே போட்டுவிட்டு போ
குப்பைத் தொட்டிக்குள்

*

சுமக்க முடியாமல்
கவிக் கருவை
கலைக்கப் போனவன்
கவலையோடு
திருப்பி வந்தான்
தாமதம் என்ற
கவிதையோடு

-யாழ்_அகத்தியன்