நிலையானவளே…!

நவம்பர் 30, 2007

 

என் சோம்பேறி மனசு
செய்த வீரமான செயல்

உன்னைக் கண்டதும்
ஓடிப்போய் உன்னைத்
தொட்டுவிட்டு திரும்பி
வராததுதான்

*

கையசைத்துவிட்டு
கல்லூரிக்குள் நுழைந்து
விடுகிறாய் நீ

விடை பெற்றுப்
போகும் கடைசி நாள்
மாணவன் போல்

வீடு செல்ல
மனமில்லாமல் நான்

*

 நம் காதலுக்கு முதல்
எதிரி நேரம்தான்

பார்
 நாம் சேர்ந்திருக்கும் போது
மட்டும்தான் போட்டி போட்டு
ஓடுகிறது

*

உன்னைக் காதலிக்க
வேண்டாம் என்பவர்களை
கூட்டி வா

ஒரு நிமிடம்  நீ
இல்லாத என்னை
கொடுத்துப் பார்ப்போம்

சமாளிக்க முடிந்தால்
சமாதானம் பேசுவோம்

*

என் கைகளுக்கு இதுவும்
தேவை இன்னும் தேவை

என்னை எதுவும் கேக்காமலே
உன்னை அணைத்து பழகிவிட்டு

 நீ தூரம் இருக்கிறாய் என்று
தெரியாமல் தேடிக் களைக்கிறது

-யாழ்_அகத்தியன்


என் பாடல்……[06]

நவம்பர் 26, 2007

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே

எனக்கென எனக்கென உன்னைப் படைக்க
அடி உனக்கு முன் உனக்கு முன் நான்
பிறந்தேனே உந்தன் விழிப் பார்வைக்குள்
 நான் வாழ அடி எந்தன் உலகமே நீயென
வந்தாயோ

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே….

அடி உந்தன் வரவே இல்லையென்றால் அட
எந்தன் வாழ்வுக்கேது பகலே அடி நீயும்
என்னைக் கழித்திருந்தால் என்னை யாரு
யாரு சிலை செய்வார்

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே….

அடி எந்தன் கவிதை யார் தந்தது இதுவரை
யாருக்கும் சொன்னதில்லையே எல்லாமே
எல்லாமே நீ தந்தது உந்தன் பெயரே
உந்தன் பெயரே என் முதல் கவியானதிங்கே

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே….

இன்னும் இன்னும் நான் என்ன சொல்ல
உந்தன் பக்தன் நான் தானே வேறு என்ன
என்னைக் கொஞ்சம் என்னைக் கொஞ்சம்
 நம்பிவிடு நா உனக்கென உனக்கென
வாழவிடு உந்தன் மடியே போதுமே
 நான் தூங்க

அடியே என் சொர்கமே நீதானே
என் நிலவே என்னை மட்டும்
காதல் செய்துவிடு

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே….

-யாழ்_அகத்தியன்


அருமையானவளே…!

நவம்பர் 24, 2007

 

நீ
என்னைத் தேடி
வருகிறாய்

 நான்
 நீயாக மாறி
என்னைத்
தேடுகிறேன்

*

 நடைபயிலும்
குழந்தையாய்
வருகிறாய்

தாயாய் என்
கவனம் எல்லாம்
உன் மேல்

*

 நீ
எங்கெல்லாம்
என்னைத் தேடுகிறாய்

என்பதை
ரசிப்பதற்காகவே
 
 நான் தொலைந்து
போகலாம்

*

 நீ
வந்தவுடன்
கை கொடுப்பதா
கன்னம் கொடுப்பதா

என்ற குளப்பத்தை
சாதுரியாமாய்
தீர்த்து வைத்தாய்

கைகூப்பி
வணக்கம் சொல்லி

*

உன்
தாவணிக்கு
எப்போது

என் தாயின்
கைவிரல்கள்
முளைத்தது

தடவியதும்
குழந்தையாய்
உறங்கி விட்டேனே

-யாழ்_அகத்தியன்


என் பாடல்……[05]

நவம்பர் 23, 2007

 madu.jpg

என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
 நீ வானிடம் வாராயோ
கை சேரயோ வான் நிலவே

என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
 நீ வானிடம் வாராயோ
கை சேரயோ வான் நிலவே

சொந்தமென யாருமில்ல
சொல்லிக் கொள்ள ஏதுமில்ல
என் சொர்கமே உன்னைவிட
ஏது வில(விலை)

பட்டப்படிப்பு படித்ததில்ல
பட்டதெல்லாம் அனுபவமே
பாவியாய் நினைத்தெனை
உன் நிழலாயெனும் கூட்டிபோ

என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
 நீ வானிடம் வாராயோ
கை சேரயோ வான் நிலவே

தேடாத வார்தையென நானிருந்தேன்
தேடியே உனைத் தேர்ந்தெடுத்தேன்
 நீயும் எனை விட்டு வைத்தால் எனை
யார் வாசிப்பார்

கலைந்து கிடக்கிறேன் எழுத்துகளாய்
என்னை கொஞ்சம் சேர்த்து வை உந்தன்
கவிதைக்கு வார்தையாகும் வரம் கொடு
 

என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
 நீ வானிடம் வாராயோ
கை சேரயோ வான் நிலவே….

-யாழ்_அகத்தியன்


இம்சையானவளே…!

நவம்பர் 23, 2007

 12

உனக்காக காத்திருக்கையில்
என்னைக் கடப்பவர்கள் மட்டும்
ராசியானவர்கள் உன் முகத்தை
அவர்களில் தேடுகிறேனே

*

அந்த சூரியனுக்கு
யார் என்னைக்
காட்டிக்கொடுத்தது

பாருங்கள்
 நிலாவுக்காக
காத்திருக்கிறேன்
என்ற கோவத்தில்
என்னை கறுப்பாக்கி
கொண்டிருக்கிறது

*
உனக்காய் காத்திருந்த
இடத்தில் கொஞ்ச நேரம்
  நி
  ன்
  று
 பார்

உன்னைப் பெற
என்னை நான்
இழந்த வலி புரியும்

*

தாமதமாய் வருவதையே
பழக்கமாய் கொண்டவள் நீ
தெரிந்தும் உனக்காய் காத்திருக்க
பழக்கப்பட்டவன் நான்

*

” நிலா” என்று யார்
உனக்கு பெயர் வைத்தது
உனக்காய் என்னை தேய
வைத்துக் கொண்டிருக்கிறாய்

-யாழ்_அகத்தியன்


என் பாடல்……[04]

நவம்பர் 22, 2007

 still31.jpg

காதல் நிலவே
கவிதையாவோமா நீயே
என் கனவே காதலி

காதல் நிலவே
கவிதையாவோமா நீயே
என் கனவே காதலி

இதயம் மலர்கையில் இதமாய்
சிவக்கிறேன் நா இமைகள்
திறக்கையில் உன்னையே
காண்கிறேன் நா நா

காதல் நிலவே
கவிதையாவோமா நீயே
என் கனவே காதலி

கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும்
மெளனமாய் தொடர்கிறாய் உன்
சம்மதமே வேண்டி என் இதயம்
துடிப்பது கேக்கலையா  மலரே
உன் இதழ் பிரித்து காதலை சொல்லிவிடு
என்னை உன்னோடு சேரவிடு காதலியே

காதல் நிலவே
கவிதையாவோமா நீயே
என் கனவே காதலி

எந்தன் உலகமே நீயடி
எனக்கென யாரடி உன்னை விட்ட
ஏதடி வாழ்க்கை எல்லாமேயானாய்
இனியுமென்ன கேள்வி உன் பதிலே
 நான் தானே காதலி என் உலகமே
வா இமைகளாய் காத்திடுவேனே

காதல் நிலவே
கவிதையாவோமா நீயே
என் கனவே காதலி

எனக்கென நீயும் உனக்கென நானும் வாழ்ந்து
ரசித்திடுவோமே எம்மை பிரிக்க ஏது சக்தி
காதல் ஒன்றே போதுமடி கவலை எதற்கு கண்ணே
காலம் கை கொடுக்கும் கடவுளை நம்பி எனை ஏற்றுவிடு
 நிலவே உந்தன் வானாமாய் நானிருப்பேனே என்றும்

காதல் நிலவே
கவிதையாவோமா நீயே
என் கனவே காதலி

காதல் நிலவே
கவிதையாவோமா நீயே
என் கனவே காதலி

இதயம் மலர்கையில் இதமாய்
சிவக்கிறேன் நா இமைகள்
திறக்கையில் உன்னையே
காண்கிறேன் நா நா

காதல் நிலவே
கவிதையாவோமா நீயே
என் கனவே காதலி….

-யாழ்_அகத்தியன்


மென்மையானவளே..!

நவம்பர் 22, 2007

 0001_171.jpg

என் இதயம்
மென்மையானது
அதனால்தான் நான்
எந்த தவறுசெய்தாலும்
என்னை கண்டிப்பதில்லை

அப்படிப்பட்ட என்
இதயத்தை கைப்பற்றி
என்னை எதுவுமே
செய்யாமல் பண்ணிவிட்டாய்

*
உன் விழிவீச்சு
படும்வரை அமாவாசை
இரவுக்குள் மறைந்து
கிடக்கின்றன
என் கவிதைகள்

*
நீ மட்டும்தான்
சிறந்த நீதிபதி நான்
எந்த தவறுசெய்தாலும்
கிள்ளுவதை மட்டுமே
தண்டனையாய் தருகிறாய்

*

உனக்கு
எதை வாங்கி
வருவது என்ற
குளப்பத்தில்

கண்ணை மூடியபடி
ஒன்றை எடுத்தேன்

கண் திறந்து
பார்க்கையில்

கையில் இருந்தது
மட்டும் சிரித்துக்
கொண்டிருந்தது

கடையில் இருந்ததெல்லாம்
அழுது கொண்டிருந்தது

*

 நீ வாசிக்க
ஆரம்பிக்கிறாய்

என் கவிதைகள்
ஒவ்வொன்றும்
கரை சேர்கிறது

-யாழ்_அகத்தியன்
 


சாந்தமானவளே..!

நவம்பர் 15, 2007

 

என் காதலா உன் காதலா
பெரிதின்னு பார்பதற்காகவாவது
நாமிருவரும் காதலிக்க வேண்டும்
உன்னிடம் நான் தோற்றுப் போனாலும்
பரவாயில்லை

*

நீ என்னை இயக்க ஆரம்பித்தாய்
இதயம் தன் பொறுப்பு பறிபோனதே
தெரியாமல் துடிக்க மட்டுமே செய்கிறது

*

நீ எனக்கு கிடைத்தமைக்கு
அமைதியாய் நன்றி சொல்லி
வழிபடத் தொடங்கினேன்

எனக்கு மட்டும் கேக்கும்படியாய்
என் மனசு இறைவனை திட்ட
ஆரம்பித்தது

தாமதமாய் உன்னை எனக்கு
காட்டியமைக்காக

*

என் புகைப்படத்தை எதற்காக
எல்லாரிடமும் காட்டுகிறாய் என்று
கோவப்படுகிறாய்

அப்போதுதான் என் இதயம்
எனக்குள் இருப்பதற்காய்
கவலைப்பட்டேன்

*
“நான் உங்களை காதலிக்கிறேன்”
என்பதை மந்திரமாய் சொல்லிக்
கொண்டிருக்கிறாய்

உன் மேல் உள்ள பக்தியில்
எனக்கு சாமி வந்து ஆட
ஆரம்பிக்கிறேன்

-யாழ்_அகத்தியன்


இதமானவளே..!

நவம்பர் 13, 2007

 10

“நான்”
 நீயாகவில்லை உன்
பக்தனாகத்தான் நான்

ஏனெனில்
உன் முதல் சந்திப்பிலேயே
“நான்” என்ற என் அகங்காரம்
என்னைவிட்டு பறந்து போய்விட்டது

*

காதலிக்கும்
இதயங்கள்தான்
என்றும் இளமையாக
இருக்குமாம் வா

 நம் முதுமையில்
 நமக்கென யாரும்
இல்லாமல் போனாலும்

 நம் இதயங்களின்
குறும்புகளை சேர்ந்தே
ரசித்திடுவோம்

*

அழகாக பூத்திருக்கும்
பூச்செடிகளைக் கண்டு நீ
ஆனந்தப்பட்டபோதுதான்

முதன் முதலாக நான்
கண்காணிக்காததால்

வாடிப்போன
பூச்செடிகளுக்காய்
கவலைப்பட்டேன்

*

உனக்காவே
பிறந்த நான்
இறைவனிடம்
வரம் கேட்டால்

 நீ சூடும்
பூக்களைப்போல்

உன்னோடு வாழ்ந்து
உன்னில் இறந்துபோக
வேண்டுமெனக் கேட்பேன்

*

என் கவிதைகளை நீ
எடுத்து சேகரித்தபோதுதான்
தெரிந்து கொண்டேன்

 நான் மனம் வைத்துத்தான்
ஒவ்வொரு கவிதையையும்
எழுதுகிறேன் என்ற உண்மையை

-யாழ்_அகத்தியன்


என் உயிர் காதலியே..!

நவம்பர் 12, 2007

 

இனிமையான
உன் குரலால்
என் இதயம்
மெழுகாய்
உருகுவதில்

மின்னும் உன்
புன்னகையால்
என் கவலைகள்
கலைந்து போவதில்

பணிவான உன்
பாசத்தால் என்
தாயில்லா சோகம்
மறந்து என் மனம்
குழந்தையாவதில்
 
இதைவிட
சின்னச் சின்ன
குறும்புகளில்

செல்லச்
சண்டைகளில்

கொஞ்ச நேர
மெளனங்களில்

கூடித் திரியும்
பொழுதுகளில்

இடைவெளியில்லா
உன் நினைவுகளில்…..

இப்படி ஏதாவது
ஒன்றில் தினமும் நீ

இந்த உலகில் நானும்
அனாதையில்லை என்பதை
மறக்கடித்துவிடுகிறாய்

-யாழ்_அகத்தியன்