மொழியானவளே..!

 DSC_0056

நான் – உறக்கம்
நீ – கனவு

உன் வரவுக்காகவே
விடிய விடியத்
தூங்குவேன்

*

என்னைத் தொலைக்காமல்
உன்னைத் தேடினேன்
என்பதில் பெருமை எனக்கு

என்னை நான் தேடவே நீ
கிடைத்தாய் என்பதில்
பெருமை உனக்கு

*

என் சொந்தங்களில் நான் தான்
முதல் கவிவாசகன் என்பதில் சிறிய
கவலை எனக்கு

இதுவரை யாருமே உன்னை
பார்த்து யார் எழுதியது என்று
விசாரித்ததில்லையே

*

உன் தாயைப்போல்
என் நேரமும்
உன்னைக் கவனிக்க
என்னால்
முடியாமல் போனாலும்

உன்னைக்
காணத நேரங்களில்
தாயாக நான் ஏங்கித்
தவிப்பதுண்டு

*

உனக்காக காத்திருந்தால்
என் கால்கள் வலிப்பதில்லை

என் மனசு ஏறி நிற்பதால்
என் தலைதான் வலிக்கும்

-யாழ்_அகத்தியன்

2 பதில்கள் “மொழியானவளே..!” க்கு;

  1. ராமநாதன் சொல்வதென்னவென்றால்:

    புகைப்படத்துடன் கவிதைகள்-அருமை.ரஸித்தேன்.

  2. RAKASIYA சொல்வதென்னவென்றால்:

    அகத்தியன் உங்கள் கவிதை படித்தேன் அற்புதம் தொடரடும் உங்கள் கவிதை

மறுமொழி இடுக