தண்ணீரில் தாமரை

ஆகஸ்ட் 23, 2009

தாமரை நீ
தண்ணீர் நான்

நீ வாழ
வற்றாமல் நான்

*

என்னைச்
சுற்றிக் கரை
உன்னைச்
சுற்றி நான்

இருந்தும்
எனதில்லை

தாமைரையாய் நீ

*

தாமரை
இலையாய் நீ

ஒட்ட மாட்டாய்
என்று தெரிந்தும்

தண்ணீர்த்
துளியாய் நான்

 

-யாழ்_அகத்தியன்