தமிழுக்கு நான் ஏழை…!

நவம்பர் 19, 2009

எனக்குத் தெரியாத
தமிழ்மீதான என் கோபம்
இன்னும் குறையவில்லை

ஏனெனில்
எப்பொழுதெல்லாம்
அதை தெரிந்த
கொள்ள் நினைக்கிறேனோ

அப்பொழுதெல்லாம்
தனி அறைகளில்
சில
கவியரசுகளிடம் மட்டும்
மனம்விட்டு
பேசிக் கொண்டிருக்கும்

தமிழே நீயும்
வசதியானவர்களின்
வர்க்கம்தான்

அதனால்தான்
என்னைப் போண்ற
ஏழைக் கிறுக்கன்களை

உன் கண்களுக்கு
தெரிவதே இல்லை

-யாழ்_அகத்தியன்


எனக்கான கவி நீ *1*

நவம்பர் 9, 2009

இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ

*

யார் சொன்னது
கண்பட்டால்
வாழமுடியாது என்று

என்னவள் கண்
பட்டதால்தானே

வாழ்கிறது
என் கவிதைகள்

*

கவிதைக்கு அழகு
கற்பனை
 நிஐத்தின்  பேரழகு நீ  

 

-யாழ்_அகத்தியன்


என் பாடல்……[08]

நவம்பர் 1, 2009

 

என் பாடல்….{08}


காதல் மலரே காதல் மலரே
என் கவியின் முதல் வரியே
எங்கே பூத்தாய் நினைவிருக்கா

என் கண்கள் இரண்டில் கவியாய் பூத்தாய்
என் நெஞ்சம் எங்கும் நிலாவாய் வளர்ந்தாய்
எந்தன் உலகத்தை உன்னால் நிரப்பினாய்
உன்னைக் கொண்டே என்னை வரைந்தாய்
உந்தன் வாழ்வில் என்னை இணைத்து
கோடி சுகம் காணவைத்தாய்

அன்பே ஆருயிரே என் ஆசையில் வளர்ந்த
கனவே உன் கையில் என்ன காந்தமா உன் கை
பிடித்தால் ஒளிமயமகுதே இதில் என்ன மாயம்
கண்ணே

உன் கண்ணில் எந்தன் விம்பம் தெரியுதே
அப்படியே நீ உறங்கிவிடு இறந்து போவேனே
இன்பமாய் உன்னில் நானே

 

-யாழ்_அகத்தியன்