சேற்றில்
விழுந்தாலும்
காதலில்
விழுந்திடாதே
உன் வீட்டில்
எல்லோரும்
தலை முழுக
வேண்டிவரும்
*
நீ
கொலை செய்த
கைதி என்றால்கூட
உன் விடுதலை
அன்றாவது
யாரையாவது
எதிர்பார்க்கலாம்
நீ
காதல் செய்தால்
எதிர்பாரமல் கூட
உன் சாவுக்கு
சொந்தம் வராது
*
உன் காதல்
குழந்தையை
கலைக்க
வைத்தியர்
தேவையில்லை
உன் குடும்ப
உறுப்பினர்
ஒருவர் போதும்
*
காதல் திரைப்படமா
பார்த்து வாங்கி வா
என்றார்கள் வீட்டில்
நான் காதலையே
வாங்கி வந்தேன்
விரட்டிவிட்டார்கள்
வீதியில்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.