பொய்யை அழகாய்
சொல்லத் தெரிந்தால்
அது கவிதை
கற்றுக்கொண்டேன்
உன்னிடம் நான்.
*
குழந்தையும்
உன் அழகும்
ஒன்றுதான்
ஏதாவது செய்து
எப்படியாவது
ரசிக்க
வைத்துவிடுகிறது.
*
எனக்குத் தெரியாத
வார்த்தைகளால்தான்
உனக்கான கவிதை
என்னுள்
உறங்கிக் கொண்டிருக்கிறது
*
நீ
எழுதிய
அழகான
கவிதை
கிறுக்கலானது
உன்
கையொப்பம்
கவிதையானதால்.