ஈழத்து அகதியாய் நான் [01]

நாளை நான் உயிரோடு
இருப்பேனா ஈழத்தில்
நண்பனின் இறந்தவிட்டில்
இன்று நான்
*

அம்மா அங்கே
அம்மாக்காக அகதியாய்
இங்கே நான்
*

காணாமல் போனால்
கண்டுபிடித்து தருவார்கள்
பிணமாக
*

தினமும் இறப்பவர்களின்
பட்டியலில் சேரதவர்கள்
சுனாமியால் இறந்த
ஈழத்தமிழர்கள்
*

வகுப்பறையில் மகள்
படிக்காட்டியும் உயிரோடு
திரும்ப வேண்டும்
சாமியறையில் தாய்
*

நான் இறந்தால் கொள்ளிவைக்க
வந்துவிடாதே நான் பெற்றதில்
உன்னை மட்டும்தான் காப்பாற்ற
முடிந்தது
*

அம்மாவோடு ஆசையாய் பேச
தொலைபேசி எடுத்தால் அம்மா
கவலையாய் பேசுவதை கேக்கவே
நேரம் முடிந்துடும்
*

என் தாயை நான் பார்த்தே
இருபது வருசமாச்சு எப்படி
சொல்லிக் கொடுப்பேன்
என் பிள்ளைக்கு என் தாய்
எப்பிடி இருப்பா இன்று என்று
*
எப்ப அம்மா சொந்த ஊருக்கு
போவோம் பொறு போவோம்
இருபது வருசமா இதைத்தானே
அம்மா சொல்கிறாய்
*


யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.