அன்னையே தெய்வம்…[02]

மார்ச் 18, 2008

அன்னையே தெய்வம்…[02]  

ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்

உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்

* 

 


அம்மா உனக்கு
அவ்வளவு பாரமாய்
இருந்தேன் என்றா

பால் கொடுத்து
என்னை வளர்த்தாய்

 நீ
தூக்கவே
முடியாதளவுக்கு
 

 

*
 
வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்
 
 

தோற்றுப்போனால்
தேடி வந்து அணைக்க
உன்னைத் தவிர யார்
எனக்கு

* 



ஆயிரம் முறை
தலை சீவிய
சந்தோசம்
 

 நீ
ஒரே ஒரு தடவை
தலை கோதிவிடும்
போது

* 

 


எல்லாம் சேலைதான்
எனினும்

 நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது

* 

 


என்னை நடக்க வைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட

 நான் விழுந்து விடக்கூடாது
என்ற கவனத்தில்தான் இருந்தது
உன் தாய்ப்பாசம்..
  

-யாழ்_அகத்தியன்  


Follow

Get every new post delivered to your Inbox.