அன்புள்ள அம்மாச்சி….!

ஜூலை 11, 2010

நான்
கேட்காமல்
கிடைத்த ஆலயம்
என் தாய்

நான்
கேட்டதும்
கிடைத்த தெய்வம்
என் தாரம்

*

இறைவனிடம் வரம்
கேட்டேன்

அவன் தன்னை
கேட்டதாய் நினைத்து

தானே என்
மனைவியானான்

*

எல்லோரும் ஆறுதல்
தேடி ஆலயம் போவார்கள்

நான் உன்னைத் தேடி
வருவேன்

*

என் கவிதைக்குள்
யாரும் இல்லை
கிறுக்கல் ஆனது

என் காதலுக்குள்
நீ இருக்கிறாய்

கவிதையானது
என் வாழ்க்கை

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.