இணையத்தில் அவள்!!

மார்ச் 16, 2007

என்னை வெப்கொம்மில்
விடாமல் பார்க்கிறாயே
ஏன் வீட்டில் யாருமே
இல்லையா?

ஹையோ ! செல்லம் நீ
திமிரா பேசும் போதே
நினைத்தேன் இவ்வளவு
அழகாய் இருப்பாய் என்று
அடிக் கள்ளி

கண்டதும் காதலில் எனக்கு
நம்பிக்கை இல்லாமல் போனது
சாட்டில் உன்னை சந்தித்ததால்

உலகமே என்னை ஒதுக்கிவைத்தாலும்
ஆன்லைனில் நீ நின்றால் போதும்
உலகத்தையே ஒதுக்கி வைப்பேன்
உனக்கு முன்னாலே

நாம்
சாட்டில் பேசும்போது நமக்கே
தெரியாமல் பல கவிதைகள்
இறந்து போகிறது இனியாவது
நாம் பேசுவதை பதிந்துவை நீ
கிழவி ஆகும் போது படித்துக்
காட்ட வேண்டும்

என் கணனி என்னவோ
நான் தன்னை பார்பதாய்
நினைத்து ரொம்ப
வெக்கப்படுகிறது நீ
ஆன்லைனில் வந்துவிட்டாயா
என அடிக்கடி நான் பார்க்கும் போது

என் மெசெஞ்சரை கேட்டுப் பார்
என் காதலை உன்னிடம் சொல்ல
வந்து எத்தனை தடவை உனக்கு
அனுப்பாமல் அழித்த கவிதையை

என் அம்மா ஊருக்கே சொல்கிறா
என் மகனுக்கு கணனியில் எல்லாம்
தெரியும் என்று அவாக்கு எப்படி தெரியும்
எனக்கு உன்கூட சாட் பண்ண மட்டும்தான்
தெரியும் என்று

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.