இனியவளே…! [12]

மார்ச் 16, 2007

கோயிலுக்கு போனாலாவது
உன்னை ஞாபகப்படுத்த எதுவும்
இருக்காது என்றுதானிருந்தேன்
ஏனோ என்னை கண்டதும் குருக்கள்
உந்தன் பெயரில் உள்ள மந்திரத்தையே
திரும்ப திரும்ப சொல்கிறார்

************

உன்னை சந்திக்க பேருந்தில்தான்
வருகிறேன் ஏதோ நான் விமானத்தில்
வருவது போல் இடுப்புபட்டியை தேடுகிறேன்

**************

எனக்காக நீயும் உனக்காக நானும்
விட்டுக்கொடுக்கும் போட்டியில்தான்
இன்னும் பிரியாமல் கூட வருகிறது
சமாதான புறாவாக நம் காதல்

****************

உன்னை சந்திக்கும் போது
கருக்கொள்கிறது உன்னை
பிரியும்போது கவிதையாய் பிறக்கிறது

****************

தயவு செய்து என்னை கவிஞன்
என்று உண்மை சொல்லாதே கிறுக்கன்
என்று பொய் சொல்லிவிடு அது போதும்
எனக்கு நான் பொய் சொல்லாதவன் என்று
நீ நம்பிவிட

*************

நிலையில்லாத வாழ்க்கையில் எதிலும்
நிம்மதி இல்லமால் வாழ்ந்து வந்தேன்
அனாதையாய் நானும் எங்கிருந்து
வந்தாய் நீ என் நிம்மதியாகவும்
என் ஆயிரம் உறவுகளின்
சொந்தகாரியாகவும்

-யாழ்_அகத்தியன்