இனியவளே…
நேற்று வீதியில் தவற விட்ட
தன் ஊன்றுகோளை தேடிய
வயோதிபரிடம் நீ தேடாமல்
எடுத்து கொடுத்த போதுதான்
என் பார்வை உன் மேல் தவற
ஆரம்பித்தது
*************************************
எனக்கு நிலவை
அதிகம் பிடிக்கும்
என்பதால்தான்
என் இதயத்துக்குள்
உன்னை வரவழைத்தேன்
*************************************
விலக விலகத்தான்
காதல் அதிகரிக்குமாமே
எங்கே ஒரு தடவை
கண் மூடித் திற
*************************************
வீட்டுக்கு பக்கத்தில்
கோயில் இல்லை என்ற
கவலை என் அம்மாவுக்கு
எனக்கந்த கவலை இல்லை
எதிர் வீட்டில் நீ இருப்பதால்.
-யாழ்_அகத்தியன்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.