
உன் வீட்டில்
யாருக்கும் கவிதை
பிடிக்காதா..?
பார்…
உன்னை எப்பிடி
சத்தம் போட்டு
கூப்பிடினம் என்று
*
நீ
பார்த்தும் பாரமல்
கடந்து செல்கிறாய்
நான்
தெரிந்தும் தெரியாமல்
தொடர்கிறேன் உன்
பின்னால்
*
உன்னைத் தவிர
எனக்கு எதுவும்
தெரிவதில்லை
இரு வரியானலும்
அதன் பொருள் நீயாக
இருக்கும் என் கவிதைபோல
*
நீ மேல் இமை
நான் கீழ் இமை
வா கனவிலாவாது
ஒன்றாவோம்
*
உன் இரு வரி உதடுகள்
ஒனறு சேர்ந்து பேசும்
மிக அழகான ஒரு சொல்
கவிதை “ம்”
-யாழ்_அகத்தியன்
பதிந்தவர் யாழ்_அகத்தியன்