வாயாடியாய் இருந்தும்
அமைதியாய் வந்தமரும்
புதிய மாணவிபோல்
வந்தமர்ந்தாய் என்
இதய வகுப்பறையில்
நீ.
*
என் முதல் வரி
நீ காதலித்தையும்
மறுவரி
நீ கைவிட்டதையும்
எப்படியாவது காட்டிக்
கொடுத்துவிடுகிறது
என் கவிதைகள்
* பலரோடு இருக்கையிலும்
தனிமையே உணர்கிறேன்
நீ இல்லாததால்
*
உனை மாதத்தில் மூன்று நாட்களில்
என் மடியில் தாலாட்டியதுதான்
ஞாபகம் வருகிறது தாய்மார்களை
காணுகையில்
*
வானவில்லாய் நீ
வந்து போனாலும்
வானமாய் காத்திருக்கும்
என் கவிதைகள் எப்போதும்
உனக்காக
-யாழ்_அகத்தியன்

யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.