என்னவளே…

செப்டம்பர் 7, 2007

முத்தபூமி5

இதுவரை நான் எந்தக்
கவிதையையும் சுட்டதில்லை
உன் பெயரைத் தவிர

*

என் கற்பனைகள்தான்
அதிகமாய் வாசகர்களுக்கு
காட்டிக் கொடுக்கிறது
உன்னை நான் கவிதையாய்
காதலிப்பதை

*

உன் சேலை நழுவுவதைப்
பார்த்தால் பயமாக இருக்கிறது
விழுந்து விடுவேனோ என்று

*

நீ எனை காதலிக்கிறாய்
என்பதை கேக்க
காத்திருக்கவில்லை

நீ என்னை காதலிக்கவில்லை
என்பதையாவது கேக்கத்தான்
காத்திருக்கிறேன்

*

நீ எது கேட்டாலும் சொல்வேன்
உன் அழகுகளில் எந்த அழகு
பிடிக்கும் என்று கேட்டால் மட்டும்
சொல்லமாட்டேன்

சொன்னால்…

உன் எல்லா அழகுகளின்
கோவத்துக்கும் ஆளாகிவிடுவேன்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.