என் நிலா நீ*

அக்டோபர் 8, 2007


நிலா….
நீ வருவாயேன
என் பகல்களையே
இரவாக்கி காத்திருந்தேன்
நீ
வரவேயில்லை
இன்னும் விடியவில்லை
எனக்கு.
*

நீ
இல்லாத இரவில் பகலால்
வாடுகிறேன் நீ இருக்கும்
இரவில் உனக்காய் பாடுகிறேன்.

*

உன்னைப் பாட பலர் இருந்தும்
உன்னைத் தேட நான் மட்டுமே

உன்னால் படிக்க பலர் இருக்கலாம்
உனக்காக வடிக்க நான் மட்டுமே

*

முட்கள் இல்லாத ரோஜாவை
எனக்கு பிடிக்காது நீயில்லாத
பகலைப் போல

*

துளைத்த புல்லாங்குழலில்தான்
இசை பிறக்கும் அது அழகு

இரவில் நீ இருக்கும்
போது பிறக்கும்
கவிதை போல.

*

நிலவே….
எனக்கு இரவு பிடித்திருக்கிறது
நீ எனக்காக சூரியனிடம் கடன்
வாங்கி ஒளிவீசுவதால்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.