எஸ்.எம்.எஸ் கவிதைகள்

அக்டோபர் 13, 2007

 

எழுதிய கவிதைகளை
கிழித்துக் கொண்டிருக்கிறேன்
உன் பெயரைப் போல் அழகாய்
இல்லை என்பதால்.

*

உன் கவிதைகளை எல்லாரும்
படிப்பார்கள் நான் மட்டும்
பாடமாக்குவேன்

*

அமாவாசையிலும்
நிலாவோடு வாழ்ந்து
கொண்டிருப்பவன்
நான் மட்டும்தான்

*

உனக்கு மாத்திரை
குடிக்க பிடிக்காது
எனக்கோ
உனக்கு காய்ச்சல்
என்றாலே பிடிக்காது

*

நீ
சிலையாய் நிற்கும்
புகைப்படத்தை பார்த்தே
சிலையாகிப் போனேன் நான்

*

நீ என்னை காதலிப்பாய்
என்ற நம்பிக்கையில்தான்
உன்னை காதலித்துக்
கொண்டிருக்கிறேன்

*

நீ
என்ன செய்து கொண்டிருப்பாய்
என்பதை எண்ணிப்பார்பதையே
நான் செய்து கொண்டிருக்கிறேன்

*

இன்று என்னைவிட்டு விடைபெற்று
போகிறாய் நாளைய உனக்காக
நான் காத்திருக்க ஆரம்பிக்கிறேன்

*

நீ
எனக்கு கிடைக்க வேண்டும்
என்பதற்காகவே உனக்கு
பிடிக்காததை செய்யக்
கூடாது என்பதில் மிகத்
தெளிவாய் இருக்கிறேன்.

*

உனக்கு
பொய் சொல்வது
பிடிக்காது தெரிந்தும்
சொல்கிறேன்

பொய்சொல்லாத நீ
கிடைக்க வேண்டுமே
எனக்கு

*

உன் புகைப்படத்தில்
நீ யாரோடு நிற்கிறாய்
என்பதே என் கண்ணுக்குத்
தெரியவில்லை

என் கண்ணுக்கு
தெரிவது நீ
மட்டும்தானே

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.