கண்ணீரின் வரிகள்…!

அக்டோபர் 14, 2007

 

உன் மனதில் பட்டதை
சொல்லிவிட்டாய்
இது தெரிந்தால்

என்
மனம்தான் படாது பாடு
படப்போகிறது

அதற்கு
உன்னை காதலிக்க
மட்டும்தானே
தெரியும்

நீ கைவிட்டது
தெரியாதுதானே…

பரவாயில்லை நீ
விட்டுப்போனது என்னை
மட்டுமாக இருக்கட்டும்

என்
மனசாவது நீ
காதலிப்பதாய்
நினைக்கட்டுமே

அதாவது
அழாமல் வாழட்டும்…

இந்தக்
காதலில் மட்டும்தான்

ஏமாற்றியவரே
ஏமந்து போவது

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.