உன் கண்களில் மிதக்க
ஆசைபட்டு மூழ்கிப்போனது
யார் யாரோ கண்களில்
என் கவிதைகள்
என்னைக் காட்டிக் கொடுப்பவன் தான்
தூரோகி என்றால் என்னவளைக் காட்டிக்
கொடுக்கும் என் கண்களை யார் என்பேன்
நீ அழகாய் கிழித்தெறிவதை
ரசிப்பதற்காகவே அழகான
கவிதைகளாய் எழுதிக்
கொண்டுவருகிறேன்
சாண் ஏற முழம் சறுக்கிறது
உன் வீட்டு வாசல்படி எனக்கு
என் நம்பிக்கை மீது நம்பிக்கையில்லாமல்
போனது நீ என்னை மறந்ததை நான்
இன்னும் நம்பவில்லை
அவளைச் சிரிக்கவைத்து
அழாமல் எடுத்துக் கொடுத்தேன்
என் செத்தவீட்டு புகைபடக்காரனாய்
அவளின் கல்யாணவீட்டுப் புகைப்படத்தை
உன் வீட்டுச் சுவரில்
எனக்கு யாரோ எழுதிய
இரங்கல் கவிதை இன்னும்
இறக்காமல் வாழ்கிறது
நீ வாசிக்க மறந்ததால்
-யாழ்_அகத்தியன்







யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.