
உன் பார்வையில்பார்த்துக் கொண்டேன்
என் கண் காட்சியை
*
உன்னை சுற்றியதில் சேலைக்கு
கிடைத்தது
அழகான தேவதை
*
தேடிப் பார்க்க தொடங்கினேன்
எனக்குள் இருக்கும் உன்னைக் கொண்டு
உனக்குள் இருக்கும் என்னை
*
உன்னை பார்த்த களைப்பில்
ஓய்வெடுக்க விரும்புகிறது கண்கள்
உழைக்க விரும்புகிறது உதடுகள்
*
முத்தத்தை முடித்து வைக்க
பிரம்மன் வைத்தான் உன்
உதட்டில் ஒரு மச்சம்
-யாழ்_அகத்தியன்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.