காதலாகுமா காதல்

மார்ச் 18, 2007

தேடித்தான் உன்னை கண்டு பிடித்தேன்
இருந்தும் இன்னும் தேடுகிறேன் உனக்குள்
என் காதலை

நான் பேசிக்கொண்டே இருக்க உன்
கண்களிடம் கற்றுகொள்ள வேண்டும்
நான் பேசாமல் இருக்க உன்னிடம்
கற்றுகொள்ள வேண்டும்

நீ காட்டும் யார் என்றாலும்
சண்டை பிடிக்க தயார்
உன் கண்களை காட்டத வரை


உன்னை சிரிக்கவைத்து
பாக்க ஆசைதான் இன்னும்
முழுசாய் பாக்க விட்டதில்லை
உன் கன்னக்குழி

நீ கிடைக்கத்தான் கவிதை எழுதுகிறேன்
இருந்தும் காட்டமல் மறைக்கிறேன் கிடைக்காமல்
போய்விடுவாயோ என்று

உன்னை ஒருதலையாக காதலிப்பது
முட்டாள்தனமாக இருந்தாலும்
உன்னைக் காதலிக்கிறேன் என்பதே
என் ஆயுளின் கெட்டித்தனம்


-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.