உன்னை எழுதுவதைவிட
உன்னை வாசிப்பதில்தான்
அதிக ஆர்வம் எனக்கு
*
உனக்காய் கவி எழுத
கற்பனைக் குதிரையை
தட்டிவிட்டேன்
அது உன்னைக் காட்டிக்
கொடுத்துவிட்டு தூங்கிவிட்டது
*
என் கண்கள் காட்டிக் கொடுத்ததில்
துரோகமில்லாத ஒன்று என்றால்
அது உன்னைக் காட்டிக் கொடுத்தது
மட்டும்தான்
*
நீ
குளிக்கையில்
தண்ணீரோடு
நானும் குளிக்கிறேன்
*
உன்னைக் கவிதையாய்
வெளியிட விரும்பி
இன்றுவரை உன் கண்களை
பற்றித்தான் எழுதிக்
கொண்டிருக்கிறேன்
-யாழ்_அகத்தியன்

யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.