காதலான கவிதைகள்…!

அக்டோபர் 17, 2007

suthan-9.JPG

நீ
என்னோடு வருகையில்
காற்று என்னைத் திட்டுகிறது
நீ
தனியாய் போகையில்
காற்றை நான் திட்டுகிறேன்

பார் காற்று புயலாய்
மாறி உன் ஆடை களைய
முயற்சி செய்வதை

*

பூக்கள் நிறைந்த தோட்டத்தில்
நடக்கையிலும் ஏதாவது ஒரு
முள் குத்திவிடுகிறது உன்
இதயத்தை ஞாபகப்படுத்த

*

இரவிலும் தூங்க விடாததுக்கும்
சேர்த்து பகலிலும் தூங்குகிறது
என் கைபேசி நீ என்னை
தொலைத்ததால்

*

உன்னைச் சுற்றுவதால் நீ
கிடைக்காமல் போனாலும்
உன் நினைவாவது கிடைக்குமே
அது போதும் எனக்கு நான்
யாரையும் சுற்றாமலிருக்க

*

உன்னில் நான்
இல்லாத இடத்துக்கு
மேல இன்றும்
தொங்குகிறது என்
இதயச் சங்கிலி

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.