உனக்காய் காத்திருந்து நிலவுகூட
பகலில் வந்து விட்டது பகல் நிலவாய்
இன்னும் நீதான் வரவில்லை
காக்க வைப்பதில் உனக்கு
அவ்வளவு சுகமா அதைவிட
சுகம் உனக்காய் காத்திருப்பதில்
உன் வருவுக்காய் எதிர் பார்த்திருந்தால்
நீ வரும் பாதைகூட உன்னை போல்
அழகாக வெக்கப்படுகிறது
உனக்காய் காத்திருந்து இறந்துபோக
ஆசைதான் உனக்காக கவிதைகள்
பிறக்காமல் போகுமென்றால்
உனக்காய் காத்திருந்து நான்
வாடிப் போகவில்லை
என் கவிதைகளுக்குத்தான்
தாடி முளைக்கிறது
நீ தாமதமாய் வரும்வரை எப்படி
சமாளிபேன் என் கவிக்குழந்தைகளை
ஒவ்வொன்றும் அம்மா வேணும் என்கிறது
என்னைக் காக்க வைக்க வேண்டும் என்பதற்காக
தயவு செய்து வராமல் விட்டு விட்டாதே
என் பேனா ஒரே நாளிளே இறந்து போய்விடும்
உன்னைக் கண்டால்போதும் எனக்குமுன்
ஓடி வரும் என் கவிதைகள் எங்கே
உன்னைக் காணவில்லை இன்னும்
என் பின்னால் என் கவிதைகள்
என் கவிதை கேக்கவே நீ
தாமதமாய் வருவாய்
அதற்காகவே வந்துவிடும்
ஆயிரம் கவிதைகள்
நீ இனி வரவேமாட்டாய் என்று
முடிவெடுத்தபின்தான் தினம் வருவாய்
இன்று முடிவெடுத்தபின்தான்
காத்திருக்கிறேன் வரவே மாட்டாயா
உனக்காய்க் காத்திருக்கும் என் நேரம்
முடிந்துவிட்டது இனியும் காத்திருந்தால்
அது என் கவிதைகளுக்காகத்தான்
-யாழ்_அகத்தியன்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.