குழந்தைதான் காதல்..!

அக்டோபர் 16, 2007

suthan-10.JPG

காதல் ஒரு
குழந்தைதான்
ஆனால் அதை
காதலி மட்டும்
சுமப்பதில்லை

இருவரும்
சுமப்பது

காதல் ஒரு
குழந்தைதான்
ஆனால் அதால்
அழமட்டுமல்ல
பேசாமல் அழவும்
தெரியும்

காதல் ஒரு
குழந்தைதான்
ஆசைப்பட்டால் அது
கிடைக்கும்வரை அழும்

காதல் ஒரு
குழந்தைதான்
எதைக் கொடுத்தாலும்
உடைத்துப் பார்க்கும்

காதல் ஒரு
குழந்தைதான்
சிரிக்கவும் அழவும்தான்
தெரியும்

காதல் ஒரு
குழந்தைதான்
வேண்டும் என்றாலும்
அழும்
வேண்டாம் என்றாலும்
அழும்

காதல் ஒரு
குழந்தைதான்
எல்லாராலும் தூக்க
முடியும்

எல்லாரலும்
அழுவதை
நிறுத்த முடியாது

காதல் ஒரு
குழந்தைதான்

ஆனாலும்

அதை யாராலும்
எறியவும் முடியாது

அதை யாரலும்
அனாதையாக்கவும்
முடியாது

அதற்கு
பெற்றொர்களே
கிடையாது

ஆம்
யாரின் உதவியும் இன்றி
யாரின் உறவும் இன்றி பிறப்பது
இந்தக் காதல் குழந்தை மட்டும்தான்.

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.