என்னைக் கோவப் படுத்தியதுக்காக
உன் மேல் நீ கோவப்படுகிறாய்
உன்னைக் கோவப் படுத்தியதுக்காக
என் கோவத்தை வெறுக்கிறேன்
*
என்னால் உன் கோவங்களை
புரிந்து கொள்ள முடிவதில்லை
ஒரு விதத்தில் அதுவும் உதவி
செய்கிறது எனக்கு ஆங்கிலம்
புரியாததால்
*
உன் கோவத்தை என் மேல் இறக்கி வைத்துவிட்டு
போய்விடுவாய் பாவம் நான் படாத பாடுபடுகிறேன்
உன் கோவத்தை யாரிடமாவது இறக்கி வைக்க
*
உன் ஆசையை காட்டுவதற்காக இப்பிடியா
வார வாரம் என்கூட கோவம் போட்டு
பேசாமல் விடுகிறாய் சில தினங்கள்
*
உன்னை அழகாய் எனக்கு காட்ட விரும்புகிறாய் என்றால்
சொல்லி இருக்கலாமே உனக்கு விரும்பிய அழகுசாதனப்
பொருட்கள் வாங்கி தந்திருப்பேனே அதை விட்டுட்டு ஏன்
என் மேல் அடிக்கடி கோவித்துக் காட்டுகிறாய்
*
உன் கோவங்களை விதைப்பதற்கு
என் மனசா கிடைத்தது பாவம்
அது வளர என் கண்ணிரைக் கடன்
கேக்கிறது
*
இதுவரை நீ என்னோடு கோவித்தது
மீது எனக்கு சந்தேகம் வந்ததில்லை
கடைசியாக நீ என்னோடு கோவப்பட்டதில்தான்
சந்தேகம் ஏனெனில் உன் கோபத்தை
நான் கவிதையாக்கி இருக்கிறேனே
-யாழ்_அகத்தியன்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.