
நீ கொடுத்த முத்தத்தால்
மொய்த்துக் கொள்கின்றன
என்னைச் சுற்றி தேனீக்கள்
*
அழகைப் பற்றி
எழுதச் சொன்னார்கள்
நான் உன்னைப் பற்றி
எழுதினேன்
உன்னைப் பற்றி
எழுதச் சொன்னார்கள்
நான் கவிதையைப் பற்றி
எழுதினேன்
*
உன்னைப் பார்த்து
எழுதிய கவிதைகள்தான்
என் சொந்தக் கவிதைகள்
*
நிலவின் கையால்
சாப்பிட்டபின்
நிலாச்சோறு
பிடிக்கவில்லை
*
எழுந்தாலும்
விழச் சொல்லும்
உன் கன்னக்குழி
-யாழ்_அகத்தியன்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.