தேடல்!

மார்ச் 19, 2007

எழுதிய கவிதையை
தொலைத்த கவிஞன்
போல் உனக்குள்
என்னைத் தேடி
களைத்துவிட்டேன்
உன் மனதின் குப்பைத்
தொட்டியைத் தவிர

தெரிந்தும் இனி
தேட இஸ்ரம் இல்லை

உன் குப்பைக்குள்
நான் ஒரு குப்பையாய்
இருக்கிறேன் என்பதை
தெரிந்து கொள்வதை விட

என் தேடலின் பிழை
என்று எண்ணி வாழவே
விரும்புகிறேன்.

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.