தொடாத சிணுங்கி

செப்டம்பர் 6, 2007

'முத்தபூமி14

உன் மெளனம் கூட
ஆசைப்படுகிறது
நீ பேசுவதைப்
பார்த்து கவிதையாக
பேச வேண்டுமென்று

*

பூச் செடிக்கு பக்கத்தில்
வைத்து உன்னை படம்
எடுத்ததில் உன்னைப் பறித்த
பூவின் புன்னகை தெரிகிறது

*

இரவு வந்தால் போதும்
கவிதை நேரத்துக்காய்
காத்துக் கிடக்கிறேன்
வானொலிக்கு பக்கத்தில்
அல்ல என் கைபேசிக்கு
பக்கத்தில்

*

உனக்கு பிடித்த எல்லாம்
எனக்குப் பிடிக்கும் உனக்கு
பிடித்த கவிஞர்களைத் தவிர

*

வாசல் அழகுக்காய் கோலம்
போடுகிறாய் நீ கோலம்
போடும் வரைதான் அழகாக
தெரிகிறது வாசல்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.