நிலா பாட்டு

நவம்பர் 9, 2007

 

வா நிலா வா நிலா வசந்தம் தா நிலா
 நீ நிலா நினைவுகள் தா நிலா பார் நிலா
உன் பார்வையின்றி தேய்வது நான் நிலா

உனைத் தேடியே என்
கண்கள் பூத்ததோ தேன் நிலா
எனைத் தேடமலே நீயும் மறைவதேன்
பால் நிலா

எங்கே நீ சென்றாலும் என் நிலா
 நீ நிலா நீயில்லா என் வானம்
அது விதவையின் நெற்றி நிலா
 நீயில்லா நான் யாருமில்லா
குழந்தை நிலா

இமைத்திடும் கண்களில் தெரிவது நீ நிலா
துடிக்கும் இதயத்தில் வசிப்பது நீ நிலா
எழுதிடும் கவிதையில் மொழியும் நீ நிலா

 நிலா நிலா நீயே என் சொந்த நிலா
காதலை இருவரும் சொன்ன நாள்
இன்றல்லவோ

வா நிலாவா நிலா வாழ்வோம் ஒன்றாய் வானம்
உள்ளவரை சேர்ந்தே…..

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.