என் காதலை விமானமாக்கி
அனுப்பிவைத்தேன் கொஞ்ச
நேரத்திலேயே தொலைத்தொடர்பை
இழந்துவிட்டது
என்ன செய்வேன் நான்
என்ன நடந்தது என்று
கேள்விகளை தொடுக்கிறது
உன் மேலான என் ஆசைகள்
என்ன சொல்லி சமாளிப்பேன்
நீயே சுட்டெரித்துவிட்டாய் என்று
உண்மை சொல்வேனா? இல்லை
எழுத்துபிழை காரணமாக காட்டுக்குள்
விழுந்துவிட்டது என்று பொய் சொல்வேனா?
நீயே சொல்….
எத்தனை மட்டும்தான் நான்
பொய்களை மட்டும் நம்பவைப்பேன்
என் ஆசைகள் வயதுக்கு வரும்வரையா?
-யாழ்_அகத்தியன்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.