பிரியுமா பிரியம்!

மார்ச் 19, 2007

என் ஞாபகங்கள் எப்போதாவது
வந்தால் உன் குழந்தையை கிள்ளிவிடு
நான் உனக்காய் அழுவதும் உனக்கு
ஞாபகம் வரட்டும்

உனை பிரியமாய் பார்த்த
அதே கண்களால்த்தான்
உன் பிரிவையையும் பார்க்க வைத்து
குருடாக்கினாய் என் கண்களை

எனை சந்திக்காமல் இருக்கத்தான்
இடம்பெயர்ந்தாய் என்று சொல்லி இருந்தால்
நான் உனக்காய் என் உயிரை சாகடித்திருப்பேனே…

என் கவிதைகளை பிடித்த அளவுக்கு
உனக்கு என்னை பிடிக்கவில்லை
அதனால்த்தானோ என்னைவிட்டு
பிரிகிறது உன்னை போல் என்
கவிதைகளும்

காதலுக்கு கண் இருக்கிறது
காதல் பிரிவுக்குத்தான் கண் இல்லை
ஆமாம் நான் பாக்கக்கூடியதாய்
நீ பாக்காமல் பிரிந்து போனாயே..

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.