மனமே மனமே..!

அக்டோபர் 8, 2007

மனதார உனை நினைத்து
மறக்காமல் உனக்காக மூச்சுவிடும்
ஜிவன் நான்.

தினம் தினம் உனை
மறக்கப் பார்த்து
கண்ணீரால் கரைந்து
போனாலும் உனை
நினைத்தே உயிர்
பெறுகிறேன் நான்.

உன்
நினைவுகளால் நினைவுக்
கடலில் நீந்தினாலும்
உனை
மறக்க முடியாமல்
மூழ்கித்தான் போகிறேன்
பலமுறை தரையில் நான்.

நீ
கற்றுக் கொடுத்த எல்லாவற்றையும்
மறந்துவிட்டேன் உன் விம்பத்தை
மறக்கப் போய் மறப்பது எப்படி
என்பதையும் நான்.

தினசரி திரையிட்டு பார்பதுண்டு
உன் முதல் நாளில் இருந்து உன் இறுதி
நாள் வரையான நம்ப முடியாத உன்
நடிப்புகளை கண்ணிரை ஓடவிட்டு நான்.

உன்னை சுலபமாக காதலித்ததைவிட
உன்னிடம் காதலை சொல்ல
எவ்வளவு கஷ்ரப்பட்டேனோ….
அதே போல்தான்
உன்னை நினைப்பதைவிட
உன்னை மறக்கவும்…………

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.