விசித்திரமானவளே…

ஜூலை 29, 2010

கும்பாபிசேக மேளச்சத்திலும்
அமைதியாய் இருக்கும்
சாமி போல
அடக்கம் உனக்கு

எப்படி
நாதஸ்வர இசைபோல
வாசித்தாய் உன் காதலை

*

அழும் குழந்தையைக்கூட
அழகாய் சிரிக்கவைத்து
புகைப்படம் எடுக்க தெரிந்த
கலைஞன் நான்

எப்படி
உன் அழகான
புன்னகை மட்டும்
புரியாமல் போனது
எனக்கு

*
பொறுக்கவே
முடியவில்லை

என் மறதிகளை

நீ கொட்டித்தீர்த்த
ஞாபகங்கள்

அவ்வளவும்
அளவில்ல பொக்கிசங்கள்

*

பிழையின்றி தமிழ்
எழுத தெரியாத என்னை
கவிஞனாக்கவே வந்து
தொலைத்திருக்கிறது காதல்

*

வெக்கப்படுவதற்காகவே
சேலை கட்டும் பெண்கள்
மத்தியில்

வெக்கத்தையே ஆடையாய்
கட்டியிப்பவள் நீ

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.